herzindagi
Directed by Krithika Udhayanidhi

Kadhalikka Neramillai : மீண்டும் காதல் கதையில் ஜெயம் ரவி!

தனி ஒருவன் இரண்டாம் பாகத்திற்கு முன்பாக கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார்.
Editorial
Updated:- 2023-12-12, 21:54 IST

கடந்த சில ஆண்டுகளால அதிரடி ஆக்‌ஷன், சமூக பொறுப்பு, மன்னர் கதாபாத்திரம் கொண்ட கதைகளில் நடித்து வந்த ஜெயம் ரவி தற்போது மீண்டும் காதல் டிராக்கிற்கு மாறியுள்ளார். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி நடிகை நித்யா மேனன்.

இந்த டைட்டிலை எங்கேயோ கேட்டிருக்கிறோமே என்ற ஞாபகம் அனைவருக்கும் வரும். ஆம் சரி தான். 1964ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் காதலிக்க நேரமில்லை என்ற படம் வெளியாகி இருக்கிறது. ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிசந்திரன், காஞ்சனா, டி.எஸ்.பாலையா, முத்துராமன், நாகேஷ், சச்சு மற்றும் பலரும் நடித்திருந்தனர். 

actress nithya menon

சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தற்காலத்திற்கு ஏற்றார் போல் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். யோகி பாபு, நடிகர்கள் லால், வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் படிங்க 18 வருடங்கள் கழித்து ரி-ரிலீஸான “முத்து” ! மாபெரும் வரவேற்பு

பிரதர், சைரன் படங்களை முடித்து விட்டு காதலிக்க நேரமில்லை படப்பிடிப்பில் ஜெயம் ரவி கலந்து கொள்வார் என கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 2015ல் வெளியான ரோமியோ ஜூலியட்டிற்கு பின்னர் முழு நீள காதல் படங்களில் ஜெயம் ரவி நடிக்கவில்லை. ரோமியோ ஜூலியட் வெளியான போது பெண்கள் மனதில் சாக்லேட் பாயாக வலம் வந்தார். 

jayam ravi as ponniyin selvan

அதன் பிறகு தனி ஒருவன், மிருதன், அடங்க மறு, அகிலன், பூமி படங்களில் முரட்டுத்தனமான பையனாக நடித்து ரக்கட் பாயாக மாறிவிட்டார். எனவே காதலிக்க நேரமில்லை படத்தில் ஜெயம் ரவி சாக்லேட் பாயாக மாறுவதற்கு அதிக வாய்ப்புண்டு. திருச்சிற்றம்பலம் படத்தில் கலக்கிய நித்யா மேனன் இந்தப் படத்தில் இணைந்திருப்பது கூடுதல் ப்ளஸ். 

மேலும் படிங்க  2023ல் அதிக ஊதியம் வாங்கிய தமிழ் நடிகைகள்

கோடை விருந்தாக இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு தனி ஒருவன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கும்.

 

 

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]