Kitchen Tips: கேஸ் அடுப்பை சுத்தம் செய்ய முடியவில்லையா? அப்ப இத பாலோ பண்ணுங்க!

கேஸ் அடுப்பை சுத்தம் செய்ய தொடங்குவதற்கு முன்னதாக, முதலில்  கேஸ் இணைப்பை அணைத்துக் கொள்ளவும்.

simple steps for gas cleaning

வீட்டில் பெரும்பான்மையான நேரம் பெண்களுக்கு சமையல் அறையில் தான் பணி என்பதால், அதை ஒதுங்க வைக்கும் வேண்டும் என்றாலே, பெண்களுக்கு எரிச்சல் தான் ஏற்படும். எப்பொழுது அந்த அறையை விட்டு வெளியில் வர வேண்டும் என்ற எண்ணம் தான் தோன்றும்.ஆனாலும் சமைப்பது, பாத்திரங்களைக் கழுவுவது போன்ற அத்தியாவசிய பணிகளை முடித்துவிடும் பெண்கள், கேஸ் அடுப்பைத் தினமும் சுத்தம் செய்ய மாட்டார்கள். இதன் மூலம் கேஸ் அடுப்பில் அதிகப்படியான அழுக்குப் படிவதால், தீயும் குறைவாக எரியும். இதனால் சமையல் பணிகளை விரைவாக முடிக்க முடியாமல் சிரமப்படுவார்கள். இது போன்று நீங்களும் சிரமப்படுகிறீர்களா? இதோ கேஸ் அடுப்பை எப்படி எளிமையாக சுத்தம் செய்வது குறித்த சிம்பிஸ் டிப்ஸ் இது தான்.

gas stove cleaning

கேஸ் அடுப்பை சுத்தம் செய்யும் முறை:

  • பெண்கள் சமையலை விரைவாக முடிக்க வேண்டும் என்பதற்காக கேஸ் அடுப்புகளை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவற்றை முறையாக சுத்தம் செய்யாவிடில் எந்த வேலையையும் சீக்கிரம் செய்ய முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு இதை முறையாக பராமரிக்க வேண்டும்.
  • கேஸ் அடுப்பை சுத்தம் செய்ய தொடங்குவதற்கு முன்னதாக, முதலில் கேஸ் இணைப்பை அணைத்துக் கொள்ளவும். கேஸ் அடுப்பில் உள்ள பிளேட்டுகளைத் தனித்தனியாக எடுத்து சூடான தண்ணீரில் 30 நிமிடங்கள் போட்டு விட்டு பின்னர் சுத்தம் செய்ய வேண்டும்.
  • கேஸ் அடுப்பின் மேற்பகுதி மட்டுமல்ல, ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக கழட்டி சரியான முறையில் சுத்தப்படுத்த வேண்டும்.
  • அடுப்பில் அதிக அழுக்கு படிந்துள்ள இடங்களில், சோப்பு நீரைக் கொண்டு ப்ரெஷ் மூலம் இவற்றை நன்றாக சுத்தம் செய்யவும்.
  • சமைக்கும் போது கொட்டும் குழம்பு போன்றவற்றால் பர்னரில் அடைப்பு ஏற்படும். இதை ஊசி அல்லது ஊக்கு கொண்டு பர்னரில் சிறிய துளையில் அடைந்துள்ள அழுக்கை நீக்கவும். இல்லையென்றால் அனைத்து இடங்களிலும் தீ முழுவதுமாக எரியாது.
  • கேஸ் அடுப்பில் அழுக்கு படிந்துள்ள இடங்களை சுத்தம் செய்வதற்கு முன்னதாக எலுமிச்சை சாறு ஊற்றவும். 30 நிமிடங்களுக்குப் பிறகு எலுமிச்சை தோல் கொண்டு அழுக்கு படிந்துள்ள இடங்களில் நன்றாக தேய்க்கவும். பின்னர் சூடான தண்ணீர் கொண்டு கழுவி விடவும்.
  • உங்களது அன்றாட சமையல் பணிகள் முடிவடைந்த பின்னர், எப்படி பாத்திரங்களை தினமும் சுத்தப்படுத்தி வைக்கிறீர்களோ? அதே போன்று கேஸ் அடுப்புகளையும் சுத்தம் செய்ய வேண்டும். சோம்பல் எதுவும் இல்லாமல் நீங்கள் செய்துவிட்டாலே உங்களது பணி எளிமையாகி விடும்.
  • உங்களது கேஸ் ஸ்டவ்களை நீங்கள் வினிகர் கொண்டு சுத்தப்படுத்தலாம். ஒரு பெரிய பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் மற்றும் வினிகர் சேர்த்துக் கொள்ளவும். இதில் பர்னர் மற்றும் அதன் மேல் உள்ள ஸ்டான்களை இந்த நீரில் சுமார் 30 நிமிடங்கள் ஊற வைத்து கழுவி எடுக்கவும்.

cooking tips ()

இது போன்ற முறைகளைப் பின்பற்றி நீங்கள் உங்களது அத்தியாவசிய தேவையான கேஸ் அடுப்புகளை சுத்தம் செய்துக் கொள்ளலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP