Tawa Cleaning Tips : இரும்பு தோசை தவாவை சுத்தம் செய்வதற்கான குறிப்புகள்

இரும்பு தோசை தவாவை அதிக சூடாக்க விடும்போது தோசை தவாவில் ஒட்டிக்கொள்ளும். இதைத் தவிர்க்க இரும்பு தவாவை மிதமான சூட்டில் பயன்படுத்தவும்

tips to clean dosa tava

தவா அல்லது தட்டையான இரும்பு பாத்திரம் இந்திய சமையலறைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் சமையல் பாத்திரங்களில் ஒன்றாகும். இது பொதுவாக தோசை, சப்பாத்தி, ஆம்லெட் போன்ற உணவு வகைகளைத் தயாரிக்க பயன்படுகிறது. பல ஆண்டுகளாக இரும்பு சமையல் பாத்திரங்கள், குறிப்பாக தவா அல்லது பான் நமது சமையலறை ஆரோக்கியத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இரும்புப் பாத்திரங்களைக் கொண்டு சமைப்பதால் நம் உணவில் இரும்புச் சத்து அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால் தொடர்ந்து இவற்றைப் பயன்படுத்துவதால் எண்ணெய் மற்றும் அழுக்கு ஆகியவை தோசை தவாவின் மேற்பரப்பில் தொடர்ந்து குவிகிறது. இதனால் தவாவில் முழு ஊட்டச்சத்து நிறைந்த உணவு தயாரிக்க முடிகிறதா என்பதை உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா ? இது உங்கள் உணவின் தரத்தையும் பாதிக்கிறது. எனவே இரும்பு தவாவை தொடர்ந்து சுத்தம் செய்வது முக்கியம். இரும்பு தவாவை சுத்தம் செய்ய சில எளிய வழிமுறைகளை இங்கே பகிர்ந்துள்ளோம்.

சூடான நீர்

முதலில் தவாவை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இது உணவுத் துகள்களை உடைக்க உதவும். மேற்பரப்பில் திரவ டிஷ் சோப்பை சில துளிகள் சேர்க்கவும். அதன் பிறகு ஸ்பான்ஜ் பயன்படுத்தி தவாவை தேய்க்கவும். சூடான நீரில் மீண்டும் கழுவவும். மென்மையான துணியைப் பயன்படுத்தி தவாவை உலர வைக்கவும்.

உப்பு மற்றும் எலுமிச்சை

எலுமிச்சையை பாதியாக வெட்டி உப்பில் நனைக்கவும். இந்த எலுமிச்சை - உப்பு கலவையை தவாவில் தேய்க்கவும். கலவையை தவாவில் சில நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடுங்கள். அடுத்து ஸ்க்ரப்பர் மூலம் தவாவை கழுவவும். மீண்டும் வெதுவெதுப்பான நீரில் கழுவி சமையலறை துணியால் உலர வைக்கவும்.

தண்ணீர் மற்றும் வினிகர்

ஒரு கிண்ணத்தில் தண்ணீர் மற்றும் வினிகரை சேர்க்கவும். ஒரு ஸ்பான்ஜ் பயன்படுத்தி இந்த கரைசலை தவாவில் தடவி மெதுவாக ஸ்க்ரப்பிங் செய்யத் தொடங்குங்கள். இதை சில நிமிடங்களுக்கு அப்படியே விடவும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா மற்றும் வெதுவெதுப்பான நீரின் கலவையை தயார் செய்யவும். இந்த பேஸ்ட்டை இரும்பு தவாவில் தடவவும். இது தவாவில் உள்ள அகற்ற முடியாத கறைகளை கூட அகற்ற உதவும். பேஸ்ட்டை சில நிமிடங்கள் ஊற வைத்துப் பின்னர் மென்மையான ஸ்பான்ஜ் பயன்படுத்தி ஸ்க்ரப் செய்யவும். வெதுவெதுப்பான நீரில் மீண்டும் கழுவவும்

வெந்நீர்

தவாவை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் தவாவில் குவிந்துள்ள உணவுத் துகள்கள் அனைத்தும் தளர்ந்துவிடும். அதன்பிறகு தண்ணீரை வடிகட்டவும். தவாவை சுத்தம் செய்ய ஸ்பான்ஜ் பயன்படுத்தவும்.

இரும்பு தவாவை சுத்தமாக வைத்திருக்க டிப்ஸ்

உங்கள் இரும்பு தவாவை சுத்தமாக வைத்திருக்க சிறந்த வழி ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு அதைச் சரியாகக் கழுவ வேண்டும். இது மேற்பரப்பில் அழுக்கு குவிவதைத் தடுக்கும். தவாவை நீண்ட நேரம் தண்ணீரில் ஊற வைக்காதீர்கள், இல்லையெனில் அது துருப்பிடிப்பதற்கு வழிவகுக்கும்.

உங்கள் தவாவை சுத்தம் செய்ய எப்போதும் மென்மையான ஸ்பான்ஜ் அல்லது ஸ்க்ரப்பரைப் பயன்படுத்தவும் அல்லது நீங்கள் தவாவின் மேற்பரப்பைக் கீறிவிட்டு மேல் அடுக்கை அகற்றுவீர்கள். உலோகப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாகக் கீறல் ஏற்படாமல் இருக்க தவாவில் சமைக்கும்போது மரத்தாலான அல்லது சிலிகான் ஸ்பேட்டூலாவைப் பயன்படுத்தவும். உங்கள் இரும்பு தவாவை உலர்ந்த இடத்தில் வைக்கவும். அதன் மேல் கனமான பொருட்களை வைப்பதை தவிர்க்கவும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP