Curly Hair Strong: சுருட்டை முடி உடையாமல் வலுவாகவும் பளபளப்பாகவும் மாற்ற சூப்பர் டீப்ஸ்

சுருட்டை முடியை வலுவாகவும், பளபளப்பாகவும் மாற்ற சில எளிய குறிப்புகளை பயன்படுத்தலாம். இந்த கட்டுரையில் சுருட்டை முடியை கவனித்துக்கொள்ளக்கூடிய சில விஷயங்களை பார்க்கலாம்

Make curly hair shiny not frizzy

சுருட்டை முடி மிகவும் அழகாக இருக்கும் ஆனால் இந்த முடியை பராமரிப்பது மிகவும் கடினம். சுருட்டை முடி மிகவும் சிக்கலாகிறது மற்றும் அதை சரியாக கவனிக்காதபோது அதிகமடியான முடி பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதனை சரியாக கவனிக்காமல் விட்டால், சிக்குண்டு, உடையும் பிரச்சனை ஏற்பட்டு, முடியின் பளபளப்பும் போய்விடும். இந்த சுருட்டை முடியை எப்படி பராமரிப்பது என்று தெரிந்துகொள்ள அழகு நிபுணர் ரேணு மகேஸ்வரி கூற்யுள்ளார். அதன் உதவியுடன் சுருட்டை முடியை வலுவாகவும், பளபளப்பாகவும் மாற்ற சில டிப்ஸ்களை பார்க்கலாம்.

தேன் உதவியுடன் முடியை கவனித்துக் கொள்ளுங்கள்

honey hair inside

சுருள் முடியை வலுவாகவும் பளபளப்பாகவும் மாற்ற தேனைப் பயன்படுத்தலாம். தேனில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் அதன் பண்புகள் முடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். தேனில் வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் பல பொருட்கள் உள்ளன அவை முடியை வலுவாகவும் பளபளப்பாகவும் மாற்றுவதற்கு பயனுள்ளதாக இருக்கும். இத்தனை பண்புகள் நிறைந்த தேனில் சில பொருட்களை கலந்து ஹேர் மாஸ்க்காக பயன்படுத்தலாம் மேலும் இந்த ஹேர் மாஸ்க் மூலம் சுருட்டை முடியை வலுவாகவும் பளபளப்பாகவும் மாற்றலாம்.

தேன் மற்றும் வாழைப்பழத்துடன் ஹேர் மாஸ்க் தயாரிக்கவும்

தேவையான பொருள்கள்

  • 1 வாழைப்பழம்
  • 4 தேக்கரண்டி தேன்

இதை இப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்

வாழைப்பழத்தை அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.

அதனுடன் தேன் சேர்க்கவும்.

இந்த பேஸ்ட்டை முடியில் தடவ வேண்டும்.

20 நிமிடங்களுக்குப் பிறகு முடியைக் கழுவவும்.

இதை வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்யவும்.

தேன், தயிர் மற்றும் கிளிசரின்

curd  curly hair inside

தேவையான பொருள்கள்

  • 2 தேக்கரண்டி தேன்
  • 4 தேக்கரண்டி தயிர்
  • 1 தேக்கரண்டி கிளிசரின்

இதை இப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்

  • ஒரு பாத்திரத்தில் தயிர் எடுத்துக் கொள்ளவும்.
  • அதனுடன் தேன் சேர்க்கவும்.
  • அதன் பிறகு கிளிசரின் சேர்க்கவும்
  • இந்த பேஸ்ட்டை முடியில் தடவவும்.
  • 20 நிமிடங்களுக்குப் பிறகு முடியைக் கழுவவும்.
  • இந்த பரிகாரத்தை வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்யலாம்.

குறிப்பு - எந்தவொரு தீர்வையும் முயற்சிக்கும் முன், நீங்கள் நிபுணர் ஆலோசனையைப் பெற வேண்டும். மேலும், ஒரு முறை பேட்ச் டெஸ்ட் செய்யவும்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP