நாள் முழுக்க ஜீன்ஸ் பேண்ட் போட்டால் என்ன ஆகும்? இந்த பக்க விளைவுகளை தெரிஞ்சிக்கோங்க

இறுக்கமான ஜீன்ஸ் அணிவது உங்களுக்கு ஸ்டைலிஷ் தோற்றத்தைத் தரும் என்றாலும், நீண்ட நேரம் இதை அணிவதால் உடலில் பல்வேறு ஆரோக்கியப் பிரச்சனைகள் ஏற்படலாம்.
image

பெண்களின் ஆடை அலங்காரத்தில் ஜீன்ஸ் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. கல்லூரி செல்லும் பெண்கள் முதல் அலுவலகம் செல்லும் பெண்கள் வரை அனைவரும் இந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்து செல்ல விரும்புகிறார்கள். இறுக்கமான ஜீன்ஸ் அணிவது உங்களுக்கு ஸ்டைலிஷ் தோற்றத்தைத் தரும் என்றாலும், நீண்ட நேரம் இதை அணிவதால் உடலில் பல்வேறு ஆரோக்கியப் பிரச்சனைகள் ஏற்படலாம். அந்த வரிசையில் ஒரு நாள் முழுவதும் இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இரத்த ஓட்டத்தில் தடை:


இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் கால்கள் மற்றும் இடுப்புப் பகுதியில் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இதனால் கால் பகுதியில் மரத்து போவது மற்றும் வீக்கம் ஏற்படலாம். நீண்ட நேரம் இதுபோன்ற ஆடைகளை அணிந்தால், நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு, வேரிக்கோஸ் நோய்க்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

jeans

தோல் பிரச்சனைகள்:


இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் உங்கள் தோல் மூச்சுவிடும் தன்மை குறைகிறது. வியர்வை மற்றும் பாக்டீரியாக்கள் சேர்ந்து தோல் அரிப்பு, சொறி மற்றும் பூஞ்சை நோய்கள் ஏற்படலாம். குறிப்பாக, இடுப்பு மற்றும் முழங்கால் பகுதிகளில் சருமத்தில் எரிச்சல் அதிகரிக்கும்.


இடுப்பு மற்றும் முதுகு வலி:


நீண்ட நேரம் இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் இடுப்பு மற்றும் முதுகெலும்பில் அழுத்தம் ஏற்படுகிறது. இது தசைகள் மற்றும் நரம்புகளில் வலியை உருவாக்கி, நாளடைவில் நிரந்தரமான முதுகுவலிக்கு வழிவகுக்கும். குறிப்பாக உட்கார்ந்திருக்கும் பணிகள் செய்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகம் ஏற்படும்.

jeans side effects

சிறுநீர் தொற்று:


இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் வயிற்றுப் பகுதியில் அழுத்தம் அதிகரிக்கிறது. இது சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் வடிகுழாய்களில் தொற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. மேலும், சிறுநீர் தடுக்கப்படுவதால் சிறுநீர்ப்பையில் பாக்டீரியா வளர்ச்சி அதிகரித்து, UTI சிறுநீர் தொற்று ஏற்படலாம்.


செரிமானக் கோளாறுகள்:


இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் வயிறு மற்றும் குடல் பகுதியில் அழுத்தம் ஏற்படுகிறது. இது உங்கள் உணவு செரிமானத்தைப் பாதிக்கும். இதனால் உங்களுக்கு அடிக்கடி வயிறு உப்பசம், எரிச்சல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

பிறப்புறுப்பு தொற்றுகள்:


இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் உங்கள் பிறப்புறுப்பு பகுதியில் காற்றோட்டம் குறைகிறது. இதனால் வியர்வை மற்றும் ஈரப்பதம் அதிகரித்து, பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது பெண்களுக்கு வெஜைனல் இன்ஃபெக்ஷன்கள் (Yeast Infection) மற்றும் பிறப்புறுப்பு எரிச்சலை உண்டாக்கும்.

vaginal health

இறுக்கமான ஜீன்ஸ் அணிவது தற்காலிகமாக ஸ்டைலிஷ் தோற்றத்தைத் தரலாம். ஆனால், நீண்ட நேரம் இதை அணிவதால் பல்வேறு ஆரோக்கியப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஜீன்ஸ் வாங்கும் போது இனி இறுக்கமான ஜீன்ஸ் வாங்காமல் தளர்வான லூஸ் பேண்ட்களை வாங்குங்கள். வசதியான, தளர்வான ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. தேவைப்படும் போது மட்டுமே இறுக்கமான ஜீன்ஸ் அணியலாம், அதுவும் அதிக நேரம் அணிந்திருக்கக் கூடாது.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP