7 Days Diet : வீட்டில் இருந்தபடியே 7 நாட்களில் எடையை குறைப்பது எப்படி?

உடல் எடையை 7 நாட்களில் குறைக்க வேண்டுமா? பதிவில் பகிரப்பட்டுள்ள 7 நாள் டயட் பிளான் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்…

 
weight loss seven days diet plan

உடல் எடையை குறைப்பதற்கு எதுவும் சாப்பிடாமல் இருக்கிறீர்களா? இவ்வாறு செய்கிறீர்கள் என்றால் அது மிகவும் தவறானது. அதிகரிக்கும் உடல் எடை அல்லது உடல் பருமனை குறைக்க உணவுகளை தவிர்ப்பது நல்லதல்ல. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் ஆரோக்கியமான உணவுகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் உங்கள் அன்றாட உணவு முறையில் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.

வீட்டு வேலையில் ஈடுபடும் பொழுது தங்களை கவனித்துக் கொள்ள பல பெண்களும் மறந்து விடுகிறார்கள். உங்கள் வீடு ஆரோக்கியமாக இருக்க முதலில் நீங்கள் உங்களை கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம். உங்களுக்கான நேரத்தை ஒதுக்கி உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல் எடை குறைப்பதில் 70:30 என்ற விகிதத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இதில் 70% உணவு முறையும் 30% உடற்பயிற்சியும் அவசியமானது.

உடல் எடையை குறைப்பதை விட நல்ல ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணரான இட்டு சாப்ரா அவர்கள் அறிவுறுத்துகிறார். உடல் எடையை குறைப்பதை விட, குறைத்த உடல் எடையை தக்க வைத்துக் கொள்வது மிகவும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். உங்கள் உடல் எடையை பராமரிக்க சரியான உணவு முறை அல்லது டயட் அவசியம். உங்களுடைய டயட் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். இந்த ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் உங்கள் எடை இழப்பை எளிதாக்கும்.

உணவியல் நிபுணர் இட்டு சாப்ரா அவர்கள் பரிந்துரை செய்த இந்த 7 நாள் டயட் பிளானை பின்பற்றுவதன் மூலம் 4-7 கிலோ வரை உடல் எடையை குறைக்கலாம். இதை இடைவிடாமல் தொடர்ச்சியாக 7 நாட்கள் கடைபிடிக்க வேண்டும். முக்கியமாக இதனுடன் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சியும் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதிகாலை - சோம்பு மற்றும் புதினா தண்ணீர்

காலை 7 மணி

fennel tea for weight loss

உங்கள் காலை பொழுது சீக்கிரம் தொடங்கினால் உணவு திட்டத்தை சரியாக பின்பற்றலாம். காலையில் எழுந்தவுடன் சோம்பு மற்றும் புதினா தண்ணீரை குடிக்கவும். இது ஒரு சிறந்த டீடாக்ஸ் பானமாக செயல்படுகிறது. அதாவது இது உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி செரிமானத்தை சீராக்கும். இதை செய்வதற்கு ஒரு கிளாஸ் தண்ணீரில் 2-3 புதினா இலைகள் மற்றும் 1 டீஸ்பூன் சோம்பு சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். இந்த தண்ணீரை காலையில் எழுந்தவுடன் குடிக்க வேண்டும்.

காலை உணவு - சுரைக்காய் தோசை

காலை 8.30 மணி

சுரைக்காயில் அதிக அளவு நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதுடன், உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். இதனால் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் நீங்கிவிடும். காலை உணவாக இரண்டு சுரைக்காய் தோசையுடன், 1/2 கப் தயிர் மற்றும் ஒரு ஆப்பிள் சாப்பிடலாம்.

இதற்கு பதிலாக நீங்கள் கோதுமையால் செய்யப்பட்ட பிரட் சாப்பிடலாம். காலை உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு கிரீன் டீ குடிக்கலாம்.

இடைப்பட்ட உணவு - ஒரு கிளாஸ் மோர் அல்லது ஏதேனும் ஒரு பழம்

காலை 11 மணி

காலை உணவு மற்றும் இடைப்பட்ட உணவுக்கு இடையே போதுமான அளவு இடைவெளி இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒரு கிளாஸ் மோர் அல்லது ஒரு கிண்ணம் பழ கலவையை காலை நேர இடைப்பட்ட உணவாக எடுத்துக் கொள்ளலாம். மோர் உங்கள் தாகத்தை தணிப்பதற்கு சிறந்தது. மேலும் இதில் குறைந்த அளவு கலோரி மட்டுமே உள்ளது. வைட்டமின் C நிறைந்த மோர் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்தும்.

மதிய உணவு- தவிடு சேர்க்கப்பட்ட சப்பாத்தி + வெஜ் சப்ஜி+ பருப்பு

மதியம் 1.30 மணி

bran roti for weight loss

மதிய உணவிற்கு 2 சப்பாத்தி, காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை சாப்பிடலாம். தவிடு நீக்கப்படாத கோதுமை மாவில் சப்பாத்தி செய்து சாப்பிடவும். உங்கள் மதிய உணவை தினமும் வித்தியாசமாக முயற்சி செய்யலாம். சிறுதானிய உணவுகள், காய்கறி கிச்சடி போன்றவற்றை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செய்து சாப்பிடலாம். இந்த நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த மதிய உணவு உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதுடன் எடை இழப்புக்கும் உதவும்.

மதிய உணவிற்கு பின் - கிரீன் டீ/மசாலா டீ

மாலை 4 மணி

இவை இரண்டும் உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மசாலா டீ செரிமானத்தை மேம்படுத்துகிறது, இதனால் உங்கள் வளர்சிதை மாற்றமும் மேம்படும். மறுபுறம், கிரீன் டீயில் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன, இவை உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றன.

இரவு உணவு-கைக்குத்தல் அரிசி+காய்கறிகள்

இரவு 7:30 மணி

brown rice for weight loss

இரவு உணவை நேரத்துக்கு சாப்பிடுங்கள். போதுமானவரை 7-7:30 மணிக்குள் இரவு உணவை சாப்பிடுவது நல்லது. இதற்கு கைக்குத்தல் அரிசி சாதம் மற்றும் காய்கறிகளை சாப்பிடலாம். இது தவிர, நீங்கள் கலவையான காய்கறி சூப் அல்லது காய்கறிகறி சாலட்களையும் சாப்பிடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: இந்த வகை டயட் உணவுகள் உடல் எடையை குறைக்க உதவாது

இரவு உணவிற்குப் பின்- கற்றாழை + தண்ணீர்

இரவு 9 மணி

கற்றாழை மற்றும் தண்ணீர் கலந்து தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன் குடிக்கவும். இந்த தண்ணீரில் இலவங்கப்பட்டை தூள் சேர்க்க மறக்காதீர்கள். இது உணவை ஜீரணிப்பதோடு மட்டுமின்றி வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க உதவுகிறது.

இரவு உணவுக்குப் பிறகு 20-30 நிமிடங்கள் நடக்க வேண்டும். இந்த டயட் அல்லது உணவு திட்டத்தை முயற்சிப்பதன் மூலம் உங்கள் எடை இழப்பு பயணத்தை எளிதாக்கலாம். உங்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்சனைகள் இருந்தால் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரின் ஆலோசனை இன்றி எந்த உணவு முறையையும் பின்பற்ற வேண்டாம்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP