‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. சுதிப்தோ சென் இயக்கத்தில் மலையாளத்தில் உருவான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் மே 5 ஆம் தேதி வெளியாகியது.
இந்த பதிவும் உதவலாம்:கஸ்டடி பட நடிகை கீர்த்தி ஷெட்டியின் அழகிய போட்டோஸ்
படத்தில் ஆதா சர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆதா சர்மா கேரளாவை பூர்விகமாக கொண்டவர். அப்பா தமிழ், அம்மா மலையாளம் மற்றும் மும்பையில் பிறந்து வளர்ந்ததால் தமிழ், ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளும் பேசக்கூடியவர்.
‘தி கேரளா ஸ்டோரி’படத்தில் நடித்த ஆதா சர்மா ஞாயிற்றுக்கிழமை விபத்தில் சிக்கியதாக தகவல் பரவியது.அதையடுத்து ஆதா சர்மா இன்ஸ்டாகிராமில் விபத்து குறித்து விளக்கமளித்துள்ளார்.
’நான் நலமாக இருக்கிறேன்’
’நான் நன்றாக இருக்கிறேன். எங்கள் விபத்து குறித்து பரவும் செய்திகளால் நிறைய செய்திகள் வருகின்றன. மொத்த குழுவும், நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம், பெரிதாக ஒன்றும் இல்லை, ஆனால் அக்கறைக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.
image:google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]