herzindagi
kollywood stars

Tamil Actress : தமிழ் நடிகைகளை மேக்கப் இல்லாமல் பார்த்து இருக்கீங்களா?

தமிழ் நடிகைளின்&nbsp; மேக்கப் இல்லாத புகைப்படங்களை பார்ப்பது மிகவும் அரிது. சினிமா விழாக்கள் தொடங்கி, கலை நிகழ்ச்சி, ரியாலிட்டி நிகழ்ச்சி, ஃபோட்டோ ஷூட் என எல்லாவற்றிலும் மேக்கபுடன் இருப்பதால் அவர்களை அவ்வளவு எளிதாக மேக்கப் இல்லாமல் பார்க்க முடியாது.&nbsp; <div>&nbsp;</div>
Editorial
Updated:- 2023-03-27, 09:55 IST

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் அறிமுகமாகி தனி சாம்ராஜ்ஜியம் நடத்தியுள்ளனர். ஒருசிலர் 2 அல்லது 3 படங்களுக்கு பின்பு ஆல் அட்ரஸ் இல்லாமல் போய் விடுவார்கள். ஆனால் சிலர் தனக்கென தனி வழியை மைத்து கொண்டு மிகச் சிறப்பாக பயணிப்பார்கள். அவர்களின் பயணத்திற்கு கிடைத்த வெற்றியாக ரசிகர்கள் இன்றும் அவர்களை கொண்டாடுகின்றனர்.

அந்த வரிசையில் ராதிகா, ரோகிணி, சுகாசினி, லட்சுமி, ரேவதி போன்றவர்கள் இன்றும் தங்களது கலை பயணத்தை தொடர்கின்றனர். அவர்களுக்கு அடுத்தப்படியாக வந்த ரம்யா கிருஷ்ணன், மீனா, குஷ்பு, ஊர்வசி போன்றவர்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றனர். அவர்களுக்கு அடுத்து 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரெட் சிம்ரன், ஜோதிகா, சினேகா, த்ரிஷா தொடங்கி நயன்தாரா, காஜல், ஜெனிலியா என இப்படி பல நடிகைகள் சினிமாவில் இன்றும் நீடித்து நிற்கின்றனர்.

இந்த பதிவும் உதவலாம்:த்ரிஷாவுக்கு ட்விட்டரில் மெசேஜ் அனுப்பிய கார்த்தி

அந்த வகையில் இந்த பதிவில் தமிழ் சினிமாவின் சில முக்கியமான நடிகைகள் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை பார்ப்போம்.

சினேகா

சிரிப்பாகி சினேகாவிடம் ரசிகர்களுக்கு பிடித்தது அவரின் ஹோம்லி லுக். நிறையய படங்களில் சினேகா மேக்கப் இல்லாமல் நடித்து அசத்தி இருக்கிறார். விரும்புகிறேன், ஆட்டோகிராப் போன்ற படங்களில் துளியும் மேக்கப் இல்லாமல் அவரின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

actress snekha

தமன்னா

மில்க் பியூட்டியான தமன்னா இயல்பாக வெள்ளை சருமத்தை கொண்டவர். அதனால் அவர் அதிகமாக மேக்கப் பயன்படுத்த மாட்டார். கல்லூரி படத்தில் மேக்கப் போடாமல் அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டது.

actress tamanna bhatia

சமந்தா

சமந்தா ஆரம்பத்தில் மாநிறமாக இருந்தார். பின்பு அவர் தனியாக ஸ்கின் ட்ரீட்மெண்ட் எடுத்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. அதன் பின்பு சமந்தா ஜொலிக்க தொடங்கி விட்டார். இப்போதும் பல இடங்களில் சமந்தா மேக்கப் இல்லாமல் மிகவும் சிம்பிளாக வருவதை பார்க்கலாம். இன்ஸ்டாவில் பலமுறை மேக்கப் இல்லாமல் நேச்சூரல் புகைப்படங்களை சமந்தா ஷேர் செய்துள்ளார்.

samantha withou makeup

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: google

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]