Divya Ganesh : சீரியல் நடிகை திவ்யா கணேஷின் ‘நோ மேக்கப் லுக்’ போட்டோஸ்..

சீரியல் நடிகை திவ்யா கணேஷின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்கள் வைரலாகி வருகிறது.

 
divya ganesh no make up look

நடிகை திவ்யா கணேஷ் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கியத. தற்போது பாக்கியலட்சுமி சீரியல் விஜய் டிவியில் டாப் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடித்து வரும் அத்தனை நடிகர்களுமே பிரபலமாகி விட்டனர் என்று கூறலாம்.

மேலும் தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் மாத்தாபங்காரம் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார் திவ்யா கணேஷ்.இவர் சீரியலில் ஹோம்லி லுக்கில் நடிப்பதால் இன்ஸ்டாகிராமில் விதவிதமான உடையில் போட்டோ ஷூட் படங்களை வெளியிடுவார்.தற்போது ’நோ மேக்கப் ’ லுக்கில் செல்ஃபி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நடிகை திவ்யா கணேஷ் இந்த புகைப்படத்தில் அழகிய ப்ளூ கலர் ஃப்ளோரல் சுடிதார் போட்டிருக்கிறார். சுடிதாருக்கு மேட்சாக காதில் சிறிய கம்மலை போட்டுள்ளார். எந்த ஒரு மேக்கப்பும் இல்லாமல் பார்க்க அழகாக இருக்கிறார். திவ்யா கணேஷின் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

divya insert

நடிகர், நடிகைகள் எப்போதும் மேக்கப் போட்டு நடிப்பதால் அவர்களை மேக்கப் இல்லாமல் பார்ப்பதற்கு ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அதனால் செலிபிரேட்டீஸ் மேக்கப் இல்லாத புகைப்படங்களை பகிர்ந்தால் அதனை ரசிகர்கள் உடனே ட்ரெண்டாக்கி விடுவார்கள். தற்போது திவ்யா கணேஷ் பகிர்ந்த செல்ஃபி புகைப்படமும் இன்ஸ்டாவில் லைக்ஸை அள்ளி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் ‘குயின்’,’கார்ஜியஸ்’,’கியூட்’ என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP