ஸ்ரீதேவி முதல் நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா வரை பல தமிழ் நடிகைகள் இந்திய திரையுலகில் கோலோச்சி எண்ணற்ற ப்ளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளனர். பான் இந்தியா படங்களில் நடிப்பதன் மூலம் பாலிவுட் நடிகைகளுக்கு இணையான சம்பளத்தை தமிழ் நடிகைகள் பெறுகின்றனர். அதே போல சொத்துகளையும் குவிக்கின்றனர். நயன்தாரா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா போன்ற நடிகைகள் பாலிவுட் வாய்ப்புகளை பெறுகின்றனர். இதில் பணக்கார தமிழ் நடிகை யார் என விரிவாக பார்க்கலாம்.
2024ல் பணக்கார தமிழ் நடிகை
2003ல் மலையாள திரைப்படத்தில் அறிமுகமான நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். கடந்த ஆண்டு ஷாருக்கானின் ஜவான் படத்தில் தீபிகா படுகோனேவை ஓரம் கட்டி லீட் ரோலில் நடித்திருந்தார். இவரது நடிப்பு, கவர்ச்சி, ஸ்க்ரீனில் தோன்றும் விதம் ஆகியவை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன.
நயன்தாராவின் நிகர மதிப்பு
பல்வேறு தரவுகளின்படி நடிகை நயன்தாராவின் நிகர மதிப்பு 183 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது. ஆடம்பரமாக வாழும் நயன்தாராவிற்கு சென்னை, ஐதராபாத் மற்றும் கேரளாவில் சொந்த ஊர் என பல்வேறு நகரங்களில் சொகுசு பங்களா வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி அவரிடம் ஜெட் கூட உள்ளது. சாதாரண ஜெட் விலை 16 கோடி ரூபாயில் இருந்து தொடங்குகிறது. திருமணத்திற்கு முன்பாக இந்த ஜெட் வாங்கியுள்ளார். அதே போல விலை உயர்ந்த கார்களும் நயன்தாராவின் வசம் உள்ளன.
படத்திற்கான ஊதியம்
தனது கதாபாத்திரத்திற்கு பெரும் தொகையை ஊதியமாக பெறுகிறார் நயன். ஜவான் படத்திற்கு 10 கோடி ரூபாய் வாங்கிய நயன்தாரா தனது அடுத்த படங்களுக்கும் அதே தொகையை கேட்டு பெற்றுள்ளார். அதிக ஊதியம் வாங்கும் தமிழ் நடிகையாகவும் நயன் விளங்குகிறார். நயன்தாராவின் சமீபத்திய படங்கள் அனைத்துமே கமர்ஷியாக வெற்றி பெற்றன.
பிரபல நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு ஒப்பந்தம் போட்டு அதன் மூலம் தலா 5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார்.
மேலும் படிங்கஇர்ஃபானுக்கு இதே வேலையா போச்சு... வியூஸ்காக தொப்புள்கொடி வெட்டும் வீடியோ வெளியிட்டாரா ?
சொத்துகளின் விவரம்
- இந்தியாவில் மட்டும் 4 சொகுசு பங்களா வைத்திருக்கிறார்
- சென்னையில் 50 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு 4 BHK வீடு
- ஐதராபாத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பு இரண்டு ஆடம்பரமான குடியிருப்புகள்
- மும்பையில் கடற்கரை பார்த்தபடி குடியிருப்பு
தயாரிப்பு நிறுவனம்
நயன்தாராவிடம் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமும் உள்ளது. நடிப்பு திறனில் மட்டுமல்ல சொத்து மதிப்பிலும் 183 கோடி ரூபாய் கொண்டு லேடி சூப்பர்ஸ்டாராக நயன்தாரா வலம் வருகிறார்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation