Chithha OTT Release: ஓடிடியில் வெளியாகும் சித்தா திரைப்படம்.. எப்போ தெரியுமா?

நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

 
chitha movie release on ott

இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் உருவான சித்தா திரைப்படம் திரையரங்குகளில் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. படத்தின் ஹீரோ சித்தார்த் தனது அண்ணன் மகளை சொந்த மகள் போல் வளர்த்து வருகிறான். ஒரு நாள் அண்ணன் மகள் காணாமல் போனதால் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்தே படம் உருவாகியிருக்கிறது.

மிகவும் உணர்ப்பூர்வமான இந்த கதையை இயக்கியதற்காக அருண்குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சமூக கருத்துள்ள படமாகவும் சித்தா திரைப்படம் திகழ்கிறது. பல பள்ளிகளில் மாணவர்களுக்கு சித்தா திரைப்படம் போட்டு காண்பிக்கப்பட்டது. இந்த படத்தை சித்தார்த் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார்.

chithha movie on disney plus hotstar

திரையரங்கிற்கு சென்று இந்த திரைப்படத்தை காண முடியாதவர்கள் நிச்சயமாக ஓடிடியில் பார்க்க வேண்டும். நவம்பர் 17 ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் சித்தா திரைப்படம் வெளியாகயிருக்கிறது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP