மிகக் குறுகிய காலத்தில் தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் ராஷ்மிகா மந்தனா. ரசிகர்களால் நேஷனல் க்ரஷ் எனவும் அழைக்கப்படுகிறார். கன்னடத்தில் இருந்து தமிழ், தெலுங்கு பக்கம் வந்த ராஷ்மிகா, பாலிவுட்டிலும் நடித்து விட்டார். இவர் நடித்திருக்கும் புஷ்பா 2 படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் வெயிட்டிங். ராஷ்மிகா மந்தனாவின் முதல் காதல் தோல்வியில் முடிந்தது. திருமணம் வரை சென்று, கடைசியில் நின்று போனது. ராஷ்மிகா, தற்போது நடிகர் விஜய் தேவர்கொண்டாவை காதலிப்பதாகவும் சொல்லப்படுகிறது. கூடிய விரைவில் இந்த தகவலை இருவரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் எனவும் கிசுகிசுக்கள் வெளியாகியுள்ளன.
சினிமாவை தாண்டி ராஷ்மிகாவுக்கு மிகவும் பிடித்த விஷயம் கார்கள். கார் பிரியையான ராஷ்மிகா வைத்திருக்கும் விலையுர்ந்த சொகுசு கார்கள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்
லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை ராஷ்மிகா கடந்தாண்டு வாங்கினார். கருப்பு நிறத்தில் இருக்கும் இந்த கார் அவரின் லக்கி கார் எனவும் சொல்லப்படுகிறது. ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்டுடன் எடுத்துக்க்கொள்ளும் ஃபோட்டோஸ்களை அதிகளவில் பகிர்வார்.
ஆடி Q3
ராஷ்மிகா மந்தனா வாங்கிய முதல் கார் ஆடி Q3ஆகும். ராஷ்மிகா 2018ல் இந்த காரை வாங்கினார். இந்த கார் வாங்கும் போது ராஷ்மிகா, காதலில் இருந்தார். எனவே, தனது முன்னாள் காதலருடன் சென்று ஆடி Q3 காரை வாங்கி, அதன் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார் ராஷ்மிகா.
ஹூண்டாய் சாண்டா ஃபே
ராஷ்மிகா மந்தனா வைத்திருக்கும் மற்றொரு கார் கருப்பு நிற ஹூண்டாய் சான்டா. இதை தனது குடும்பத்திற்காகவே வைத்துள்ளார் ராஷ்மிகா. குடும்பத்துடன் பயணம் மேற்கொள்ளும் போது இந்த காரை தான் ராஷ்மிகா செண்டிமெண்டாக பயன்படுத்துவாராம்.
இதுப்போன்ற பிரபலங்கள் தொடர்பான பதிவுகளுக்குமேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: Instagram
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation