நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கடந்த ஆண்டு சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். உடல்நிலை கொஞ்சம் தேறிய நிலையில் தான் விஜய் தேவரக்கொண்டா நடிப்பில் குஷி படத்திலும், சிட்டாடல் வெப் தொடரிலும் நடித்தார். குஷி திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. குஷி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கிறது.இதற்கு பிறகு சமந்தா எந்த படங்களிலும் நடிக்கபோவதில்லையாம்.
உடல்நலனை கருத்திக்கொண்டு ஒரு வருடம் சினிமாவிலிருந்து ஓய்வு எடுக்க உள்ளாராம். சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாக கூறப்படுக்கிறது. சிகிச்சையின் போது நன்றாக ஓய்வெடுக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் நடிகை சமந்தா தான் நடத்தி வரும் ‘சாகி’என்ற கிளோத்திங் பிராண்டை ப்ரமோட் செய்வதற்காக போட்டோ ஷூட் செய்திருக்கிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விதவிதமான உடைகளை அறிமுகப்படுத்தி வருகிறார்.
இந்த பதிவும் உதவலாம் : சீரியல் நடிகை காவியா அறிவுமணியின் கலக்கல் போட்டோ ஷூட்!
இந்த புகைப்படத்தில் பிங்க் நிற புடவையில் ரசிக்க வைத்திருக்கிறார். அதற்கு மேட்சாக வெள்ளை நிற சிலீவ் லெஸ் ஜாக்கெட் போட்டிருக்கிறார்.மற்றொரு புகைப்படத்தில் சிவப்பு நிற புடவை கட்டியிருக்கிறார். புடவைக்கு மேட்சாக சிவப்பு நிறத்திலே ஜாக்கெட் அணிந்திருக்கிறார். இந்த ட்ரெடிஷ்னல் லுக்கில் பார்க்க அழகாக இருக்கிறார். இந்த புகைப்படங்களை பதிவிட்டு தீபாவளி கலெக்ஷன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]