நடிகை மாளவிகா மோகனன் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து விஜய் உடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்தார். இந்த படம் மூலம் மாளவிகா மோகனனுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக சிலம்பம் பயிற்சியை மேற்கொண்டார்.மலையாள படங்களிலும் மாளவிகா நடித்துள்ளார்.சமீபத்தில் மலையாளத்தில் வெளியான கிறிஸ்டி என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது ஹிந்தியில் யுத்ரா என்ற படத்தில் கமீட் ஆகி இருக்கிறார்.
மாளவிகாவுக்கு வெக்கேஷன் மற்றும் ட்ரெக்கிங் செல்வது பிடிக்கும் என்பதால் அடிக்கடி புதிய இடங்களுக்கு சென்று புகைப்படங்களை பகிர்வார். அதுமட்டுமில்லாமல் ஸ்பெஷல் போட்டோ ஷூட் செய்தும் பதிவிடுவார். சமீபத்தில் சிவப்பு நிற உடையில் மாளவிகா மோகனன் பதிவிட்ட படங்கள் லைக்ஸை குவித்து வருகிறது.
காஸ்ட்யூம்
இந்த புகைப்படத்தில் நடிகை மாளவிக மோகனன் மெர்மைட் கட் கார்செட் கவுனை அணிந்துள்ளார். இந்த லுக்கில் பார்க்க அழகாக இருக்கிறார். உடைக்கு ஏற்றப்படி காதில் கற்கள் பதித்த தோடு மற்றும் கழுத்தில் நெக்லஸ் ஒன்றை போட்டுள்ளார்.
மேக்கப்பை பொறுத்தவரை கண்ணிற்கு காஜல், மஸ்காரா மற்றும் உதட்டிற்கு லிப் ஸ்டிக் போட்டிருக்கிறார். ஹேர் ஸ்டைலை பொறுத்தவரை ஃப்ரீ ஹேர் விட்டு ரசிக்க வைத்துள்ளார். மாளவிகா மோகனனின் இந்த புகைப்படங்கள் லைக்ஸை குவித்து வருகிறது.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]