தெலுங்கில் உப்பென்னா என்ற படம் மூலம் அறிமுகமான கீர்த்தி ஷெட்டிக்கு முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.அதன் பின்பு கீர்த்தி ஷெட்டி நடித்த படங்கள் பெரும் வெற்றியை பெற்றுதரவில்லை. சமீபத்தில் நாக சைதன்யா நடிப்பில் வெளியான கஸ்டடி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் பாசிடிவ் விமர்சனங்களை பெற்றது.
இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருந்த வணங்கான் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் இந்த படம் சில காரணங்களால் சூர்யா இந்த படத்திலிருந்து விலகினார்.
இன்ஸ்டாகிராம்
நடிகை கீர்த்தி ஷெட்டி இன்ஸ்டாகிராம் விதவிதமாக காஸ்ட்யூமில் போட்டோ ஷூட் செய்து பதிவிடுகிறார். லேட்டஸ்டாக பதிவிட்ட படங்கள் லைக்ஸை குவித்து வருகிறது..
இந்த பதிவும் உதவலாம்: கருப்பு நிற லெஹங்காவில் கிறங்கடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் போட்டோஸ்!
கலர்ஃபுல்லான லெஹங்காவை அணிந்துள்ள கீர்த்தி ஷெட்டி பார்க்க அழகாக இருக்கிறார்.ஃப்ளோரல் டிசைன் கொண்ட சிலீவ் லெஸ் பிளவுஸ் அணிந்திருக்கிறார். கழுத்தில் எதுவும் போடாமல் காதில் பெரிய கம்மல் போட்டுள்ளார். ஹேர் ஸ்டைலை பொறுத்தவரை போனி டைல் போட்டு கீழே மட்டும் கர்லிங் செய்துள்ளார். மொத்தத்தில் கீர்த்தி ஷெட்டியின் இந்த லுக் ரசிக்க வைக்கிறது.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]