herzindagi
vijay off to thailand for thalapathy

Actor Vijay : தாய்லாந்து புறப்பட்டு சென்ற நடிகர் விஜய்! ஏன் தெரியுமா?

லியோ படத்தின் வெற்றி விழாவை தொடர்ந்து நடிகர் விஜய் தாய்லாந்து புறப்பட்டு சென்றிருக்கிறார். <div>&nbsp;</div>
Editorial
Updated:- 2023-11-03, 12:51 IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ’தளபதி 68’படத்தில் விஜய் நடிக்கயிருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் வெளியாகி வேற லெவல் வரவேற்பை பெற்றது. இதனால் வெங்கட் பிரபுவின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. 

தளபதி 68 படத்தின் பூஜை விஜயதசமி நாளில் நடைப்பெற்றது. படத்தின் பூஜை வீடியோவை படக்குழு தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிட்டது. இந்த படத்தில் பிரபு தேவா, பிரசாந்த், யோகி பாபு, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, மோகன், பிரேம்ஜி, வைபவ்  என பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இந்த பதிவும் உதவலாம் :  இத்தாலியில் நடைப்பெற்ற தெலுங்கு நடிகர் வருண் தேஜ் - லாவண்யாவின் பிரம்மாண்ட திருமணம்!

 

vijay leo sucess meet

இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைப்பெற்று வருகிறது. இதில் கலந்துக்கொள்ள படக்குழு அக்டோபர் 31 ஆம் தேதி தாய்லாந்த் நாட்டிற்கு புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா நடந்து முடிந்ததை அடுத்த நடிகர் விஜய் இன்று காலை தாய்லாந்து நாட்டிற்கு தனியாக புறப்பட்டு சென்றிருக்கிறார். நடிகர் விஜய் விமான நிலையத்தில் எண்ட்ரி ஆகும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]