Ethirneechal serial glance : எதிர்நீச்சலில் சீரியலில் போலீசாரை அடித்து தம்பிகளுடன் கைதாகும் ஆதிகுணசேகரன்

போலீசாரை அடித்துக் கெத்துகாட்டிய ஆதிகுணசேகரன் மற்றும் தம்பிகள் கைதுசெய்து காட்டு காட்ட கூட்டிச் செல்லும் போலீசார்

  • Shobana M
  • Editorial
  • Updated - 2023-10-10, 20:51 IST
nnechal

தகிடு தக ஆடும் எதிர்நிச்சலீல் ஆதி குணசேகரன், பலார், பலார் என்று அறைவாங்கி அமைதியாக இருக்கும் ஈஸ்வரி உண்மையில் லேட்டஸ்ட் எபிசோட்கள் அனைவரையும் கதிகலங்க செய்து விட்டது என்றே கூறலாம். அதுவரை ஆதி குணசேகரன் வாயில் தான் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் தற்போது நந்தினி பேசினாலும் ஈஸ்வரிக்கு அடி விழுகின்றது. அதனைப் பார்த்துச் கைதட்டி சந்தோஷப்படும் கதிர் கொழுந்தனார். மனதிற்குள் கவலைப்படும் ஞானம்.

ஹனிமூன் போகணும் மாமா என்று ஆட்டம் ஆடும் கரிகாலன் அதற்கு ஏற்பாடு செய்யத் தம்பிகள் இருவர்களையும் ஏவும் அண்ணன் ஆதி குணசேகரன் இவன் அண்ணனா இல்லை வேற என்ன என்று கேட்கும் அளவிற்கு ஆடியன்ஸ் மத்தியில் ஆத்திரம் பொங்குகின்றது.

மிகுந்த கவலை தோய்ந்த முகத்துடன் நந்தினி பட்டம்மாள் பாட்டி மற்றும் ரேணுகா பிள்ளைகள் அனைவரும் ஒன்று கூடி வருத்தமாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அப்பத்தாவாக வரும் பட்டம்மாள் அவர்களுக்குத் தெம்பு தைரியம் குடுப்பதைவிட அவரவர் சுயமாகச் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கின்றார்.

முதலில் சிந்திக்கத் தூண்டிய பட்டம்மாள் பின்பு செயல்படவும் அறிவுரை கூறுகின்றார். ஆதிகுணசேகரன் வருவதற்கு முன்பு மாமியார் விசாலாட்சி ஒட்டுமொத்த கலவர முகத்துடன் அமைதியாக நகரும் எதிர்நீச்சல் சீரியல், வீட்டில் இருப்பவர்களைத் திட்டினாலும் பரவாயில்லை வீட்டிற்கு விருந்தாளியாக வந்தவர்களைச் சோத்துக்கு வந்தவர்கள் என்று வேறு கடிந்து கொள்கிறார் ஆதி குணசேகரன்.

ethirneecஅனைவரும் நொந்து நூடுல்ஸ் ஆகி ‘இவன் வீட்ல எவன் சாப்பிடுவான்’ என்று கிளம்பி விட்டனர். பொறுமையை முக்கிய ஆயுதமாகக் கொண்ட எதிர்நீச்சல் வீட்டு பெண்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்று ஆர்வத்துடன் காத்திருக்கும் ஆடியன்ஸ். இன்னும் ஒரு வாரத்திற்கு அவர் ஆடுவார் அதன் பின்பு பட்டம்மாள், ஆதிகுணசேகரன் வீட்டு பெண்கள் ஒரு செக் வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி எதிர்நீசச்ல் பிள்ளைகள் அனைவரும் தனியாய் இருக்கினறனர். அப்பொழுது விசாலாட்சி அவர்களை மிரட்டல் விடுக்கிறார். இனிமேல் யாரும் அவரவர் விருப்பபடி இருக்க முடியாது என்று மிரட்டுகிறார். நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி ஆகியோர் மத்தியில் மிரட்டல்கள் கொடுக்கப்படுகிறது.எந்த ஒரு ஏளன பார்வையும் பார்க்கக் கூடாது. நக்கல் செய்யக் கூடாது ஈஸ்வரிக்கு விழுந்த அடி உங்களுக்கும் விழும் என்று மாமியார் எச்சரிக்கை செய்கின்றார்

எதிர்நீச்சலில் ஆதி குணசேகரன் இனிமேல் இந்த வீட்டில் தன்னை கேட்டுதான் எல்லாம் நடக்க வேண்டும் தன்னை மீறி யாரும் செயல்பட கூடாது என்கின்றார். அபொழுது அங்கு வந்த காவல்துறையினர் மீது கை வைத்ததால் அண்ணன் தம்பிகள் மூன்று பேரும் அரஸ்ட் செய்யப்படுகின்றனர். அண்ணன் தம்பிகள் மூவரும் கைது செய்யப்பட்டு சிறைக்கு அழைத்துச் சொல்லப்படுகின்றனர். ஆதிகுணசேகரன் தம்பிகளுடன் கைது செய்யப்படுவதைப் பார்த்து மகிழ்ச்சியாகும் எதிர்நீச்சல் வீட்டுப் பெண்கள். உடனே அதனைக் கண்டு கோபத்துடன் திட்டும் மாமியார் விசாலாட்சி மகன்களைச் சிறைக்கு அனுப்பி மகிழ்ச்சியோ எனத் திட்டுகிறார். இந்தத் நேரத்தில் நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி மூவரும் என்ன செய்யப் போகின்றனர் என்று ஆடியன்ஸ் காத்திருக்கின்றனர்.

Image sourde : Google
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP