herzindagi
dark circles best oil

Oil for Dark Circles : கருவளையத்தை விரட்டி அடிக்கும் எண்ணெய் எது தெரியுமா?

கண்களுக்கு கீழ் ஏற்படும் கருவளையத்தை சரிசெய்யும் எண்ணெய் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். 
Editorial
Updated:- 2023-10-05, 21:00 IST

30 வயதுக்கு பின்பு பெண்கள் அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனை கருவளையம். ஆனால் இப்போதெல்லாம் 20 வயதிலே பெண்களுக்கு கருவளையம் வந்து விடுகிறது. அதிகப்படியான மொபைல் பயன்பாடு, உணவு பழக்கம், தூங்கும் நேரம், அழகு சாதன பொருட்கள் ஆகியவை இதற்கு காரணமாக சொல்லப்படுகின்றன. இதை சரிசெய்ய பல்வேறு வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அதில் முக்கியமானது எண்ணெய் பயன்பாடு. 

கண்களுக்கு எண்ணெய் பயன்படுத்துவதால் கருவளையத்தை சரிசெய்யலாம் தெரியுமா? அதிலும் பாதாம் எண்ணெய் கண்களுக்கு கீழ் ஏற்படும் கருவளையத்தை விரட்ட எற்றது. அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். 

பாதாம் எண்ணெய்யின் நன்மைகள் 

பாதாம் எண்ணெயில் இருக்கும் ஒலிக் அமிலம், லினோலிக் அமிலம் மற்றும் ஸ்டெரிக் அமிலம் ஆகியவவை கண்களுக்கு ஈரப்பதத்தை தருகின்றன. வறண்ட பகுதியை சரிசெய்கின்றன பாதாம் எண்ணெயில் வைட்டமின்கள் ஈ, ஏ மற்றும் கே உள்ளன. இது கண்களுக்குக் கீழே உள்ள சுருக்கங்கள் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷனைக் குறைக்கின்றன. 

almond oil for eye

பயன்படுத்தும் முறைகள் 

  • இரவு தூங்க செல்வதற்கு முன்பு பாதாம் எண்Neய்யை கொண்டு கண்களுக்கு கீழ் மசாஜ் செய்யவும். விரல்களை வைத்து 5 நிமிடம் வரை கண்களுக்கு மசாஜ் கொடுக்கவும். 
  • பாதாம் எண்ணெய்யில் சிறிதளவு தேன் சேர்த்து மிக்ஸ் செய்து இரவில் கண்களுக்கு கீழ் தடவவும். 
  • பாதாம் எண்ணெய்யுடன் சிறிதளவு ஆலிவ் ஆயில் சேர்த்து மிக்ஸ் செய்து, கண்களை சுற்றி தடவி மசாஜ் செய்யவும். நல்ல ரிசல்ட் கிடைக்கும். 
  • இந்த வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றுவதே சிறந்தது. ஒரே நாளில் ரிசல்ட் தெரிய வேண்டும் என எதிர்பார்க்க கூடாது. 

குறிப்பு : கண் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள், கண்ணாடி அணிபவர்கள் மருத்துவரிடம் அனுமதி பெற்ற பின்பு இதை ட்ரை செய்யவும். 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]