herzindagi
homemade face pack once every week you will get tremendous skin glow

வாரத்திற்கு ஒருமுறை வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க- முகம் பளபளப்பாக ஜொலிக்கும்!

உங்கள் முகம் பளபளப்பாக ஜொலிக்க வேண்டுமா? வாரத்திற்கு ஒரு முறை வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணுங்க. உங்கள் முகம் பொலிவாக மாறும்!
Editorial
Updated:- 2024-07-31, 23:05 IST

பெண்களின் மிகப்பெரிய கனவே தங்கள் முகம் பலரது மத்தியில் பொலிவாகவும், அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இதற்காக பெண்கள் பல்வேறு வழிகளில் மெனக்கெடுவார்கள். குறிப்பாக, சந்தைகளில் கிடைக்கும் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி எப்படியாவது தங்கள் முகத்தை பொலிவாக மாற்றி அழகாக தோற்றமளிக்க செய்ய வேண்டும் என்று போராடுவார்கள்.

தற்போதைய நவீன காலத்தில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எப்போதுமே அழகாக தோற்றம் அளிக்க வேண்டும் என்பதே பெண்களின் பிரதான எண்ணமாக உள்ளது. இதற்காக சில பெண்கள் இயற்கை வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்கிறார்கள் ஆனால் சரியான முடிவு கிடைக்கப்பெற்றதா என்பது கேள்விக்குறிதான் .

இனிமேல் சந்தையில் கிடைக்கும் அழகு சாதன பொருட்கள் வேண்டாம். பார்லருக்கு சென்று பட்ஜெட்டை செலவு செய்யவும் வேண்டாம். வீட்டிலேயே ஒளிரும் சருமத்தை பெற மூன்று படிகளில் உங்கள் முகத்தை பளபளப்பாகவும் அழகாகவும் மாற்ற முடியும்.

மேலும் படிக்க: குளிப்பதற்கு முன்? குளிப்பதற்கு பின்? தலைமுடிக்கு எப்போது எண்ணெய் தடவ வேண்டும்?

வாரத்திற்கு ஒருமுறை வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஃபேஸ் பேக்களை பயன்படுத்துங்கள் நீங்கள் அற்புதமான பளபளப்பை பெறுவீர்கள்.

வீட்டிலேயே இந்த இயற்கையான 3 வழிகளை முயற்சி செய்யுங்கள்

homemade face pack once every week you will get tremendous skin glow

டோனர் மூலம் முகத்தை சுத்தம் செய்ய ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்

  • அரிசி
  • கற்றாழை ஜெல்

செய்முறை

  1. அரிசியை நன்றாகக் கழுவி இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
  2. காலையில், அரிசி தண்ணீரை வடிகட்டி, அதில் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்க்கவும்.
  3. இந்த கலவையை காட்டன் பேடில் தடவி முகத்தை நன்றாக சுத்தம் செய்யவும்.
  4. இந்த டோனரை தொடர்ந்து பயன்படுத்துவது முகத்தில் உள்ள கறைகள் மற்றும் இறந்த சருமத்தை அகற்ற உதவும்.

அரிசி மாவு, பால், தேன் ஃபேஸ் பேக்

homemade face pack once every week you will get tremendous skin glow  .

தேவையான பொருட்கள்

  • அரிசி மாவு
  • தேன்
  • பால்

செய்முறை

  1. அரிசி மாவு, தேன் மற்றும் பால் கலந்து பேஸ்ட் தயாரிக்கவும்.
  2. இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவவும்.
  3. அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவவும்.
  4. இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரம் இருமுறை பயன்படுத்தினால் சருமம் பொலிவு பெறும்.

முகம் சீரம் மூலம் பளபளப்பைப் பெற

homemade face pack once every week you will get tremendous skin glow

தேவையான பொருட்கள்

  • அரிசி தண்ணீர்
  • கற்றாழை ஜெல்
  • கிளிசரின்
  • ஒரு வைட்டமின் ஈ காப்ஸ்யூல்

செய்முறை

  1. இரண்டு ஸ்பூன் அரிசி நீரில் இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் ஒரு ஸ்பூன் கிளிசரின் கலக்கவும்.
  2. ஒரு வைட்டமின் ஈ காப்ஸ்யூல் சேர்த்து நன்கு கலக்கவும்.
  3. இந்தக் கலவையை ஒரு பாட்டிலில் நிரப்பி இரவு தூங்கும் முன் முகத்தில் தடவவும்.
  4. இந்த ஃபேஸ் சீரம் கரும்புள்ளிகளை நீக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.

இந்த மூன்று எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், பார்லருக்குச் செல்லாமல் உங்கள் முகத்தை அழகாகவும், பளபளப்பாகவும் மாற்றலாம்.

மேலும் படிக்க: வெயிலில் சுற்றி உங்கள் கைகள் கருப்பாக உள்ளதா? இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க! செம்ம ரிசல்ட் கொடுக்கும்!

இதுபோன்ற அழகியல் சார்ந்த ஆரோக்கியமான தகவல்களை தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் HerZindagi Tamil

image source: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]