herzindagi
image

கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தி முடி உதிர்வை தடுக்கும் ஆளி விதைகளை பயன்படுத்தும் எளிய முறை

உங்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தி முடி உதிர்வை தடுக்க உதவும் ஆளி விதைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதன் மூலம் ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்.
Editorial
Updated:- 2025-10-24, 12:49 IST

கூந்தல் வளர்ச்சிக்கு ஆளி விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், ஆளி விதைகளின் பயன்கள் மற்றும் அவற்றை எடுத்துக் கொள்ளும் விதம் ஆகியவற்றை காண்போம்.

மேலும் படிக்க: குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும் இயற்கை பானங்கள்

 

ஆளி விதையின் நன்மைகள்:

 

ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ மற்றும் லிக்னன்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் ஒன்றிணைந்து முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தவும், முடி உதிர்வதை குறைக்கவும், வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகின்றன.

 

இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. இதனால் பொடுகு மற்றும் வறட்சி ஆகியவை கட்டுப்படுத்தப்படுகிறது. வைட்டமின் ஈ, ஒரு ஆக்ஸிஜனேற்ற கவசமாக செயல்பட்டு, மாசு, வெப்பம் மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றால் ஏற்படும் சேதத்திலிருந்து உங்கள் முடியை பாதுகாக்கிறது.

 

ஆளி விதைகள், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. இவை ஊட்டச்சத்துகளை சிறப்பாக கொண்டு சேர்க்கின்றன. மேலும், ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும் இது உதவுகிறது.

 

ஆளி விதை நீர்:

 

முடி வளர்ச்சிக்காக ஆளி விதைகளை உட்கொள்வதற்கான எளிதான மற்றும் மிகவும் பயனுள்ள வழி ஆளி விதை நீர் ஆகும். இது லேசானது, புத்துணர்ச்சி அளிப்பது மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றது. ஒரு டேபிள் ஸ்பூன் ஆளி விதையை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில், தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். இந்த பானம் செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் முடி வலிமையாக வளர தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. இது இரசாயனங்கள் அல்லது மாத்திரைகள் இல்லாமல் உங்கள் முடிக்கு ஒரு இயற்கையான சப்ளிமென்ட் போன்று செயல்படுகிறது.

Flax seeds

மேலும் படிக்க: மழைக்காலம் வந்தாச்சு... சருமம் பாதிப்படையாமல் இருக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

 

ஆளி விதை பொடி:

 

இதை பானமாக அருந்த உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மற்றொரு முறையில் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் ஆளி விதைகளை வறுத்து, பொடியாக அரைத்து உங்கள் உணவின் மீது தூவி உட்கொள்ளலாம். ஒரு டீஸ்பூன் வறுத்த ஆளி விதை பொடியை ஸ்மூத்தி, தயிர் அல்லது மோர் ஆகியவற்றில் கலக்கவும். சப்பாத்தி செய்யும் போது அதன் மாவில் இதை சேர்த்துக் கொள்ளலாம். உங்களுடைய வழக்கமான உணவில் ஆளி விதைகளை சேர்ப்பது, ஆரோக்கியமான கூந்தலுக்கு உங்கள் உடலுக்கு தொடர்ந்து ஊட்டச்சத்துகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான எளிய வழியாகும்.

Flax seeds

 

ஒரு நாளைக்கு சுமார் 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் ஆளி விதைகள் போதுமானது. அதிகமாக உட்கொண்டால் வயிறு கோளாறு ஏற்படலாம். குறிப்பாக, இதனை காலை நேரத்தில் எடுத்துக் கொள்வது கூடுதல் பலன் அளிக்கும். மேலும், முடி வளர்ச்சிக்கு சிறிது காலம் எடுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குறைந்தது 6 முதல் 8 வாரங்களுக்கு தொடர்ந்து இதனை எடுத்துக் கொண்டால் நல்ல பலன்களை காண முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]