முடி உதிர்வை தடுப்பதற்கு அரிசி வடித்த நீரை பயன்படுத்துவது இயற்கையான செயல்முறையாகும். இது உச்சந்தலையை ஊட்டமடையச் செய்து, முடியின் வேர்கால்களை வலுப்படுத்துவதாக நம்பப்படுகிறது. அதன்படி, அரிசி வடித்த நீரை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த சில எளிய வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.
மேலும் படிக்க: வெயிலின் தாக்கத்தால் முகம் கருமையாகி விட்டதா? கவலையே வேண்டாம்... இந்த 5 ஹோம்மேட் ஃபேஸ்பேக்கை ட்ரை பண்ணுங்க!
சாதம் வடித்த பிறகு, மீதமுள்ள தண்ணீரை சேகரித்துக் கொள்ளுங்கள். இந்த நீரில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த அரிசி வடித்த நீர் அறை வெப்பநிலைக்கு வரும் வரை குளிர விடவும். கூடுதல் பலன்களுக்கு, இதனை சுமார் 24 மணி நேரம் அறை வெப்பநிலையில் வைத்திருப்பதன் மூலம் நொதிக்கச் செய்யலாம். நொதிக்கப்பட்ட அரிசி நீரில், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் பண்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
அரிசி வடித்த நீர் உங்கள் உச்சந்தலையை சென்றடைவதை உறுதி செய்ய, முடியை பிரித்துக்கொள்ளவும். ஒரு ஸ்ப்ரே பாட்டில் அல்லது காட்டனை உருண்டையாக்கி பயன்படுத்தி, அரிசி வடித்த நீரை நேரடியாக உங்கள் உச்சந்தலையில் தடவவும். இரத்த ஓட்டத்தை தூண்டுவதற்கு சில நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும்.
அரிசி வடித்த நீரை உங்கள் உச்சந்தலையில் சுமார் 15-30 நிமிடங்கள் வரை ஊற விடவும். இதனால் அரிசி நீரில் உள்ள ஊட்டச்சத்துகள், முடியின் வேர்கால்களுக்குள் ஊடுருவ நேரம் கிடைக்கும். அது ஒழுகாமல் இருக்க, முடியை ஷவர் கேப் கொண்டு மூடிக்கொள்ளலாம்.
மேலும் படிக்க: இந்த எண்ணெய் மட்டும் தான் தலை முடிக்கு யூஸ் பண்ணுவேன்; சீக்ரெட் உடைத்த ஸ்ருதி ஹாசன்
15-30 நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் கூந்தலை மிதமான வெந்நீரில் நன்கு அலசவும். அரிசி வடித்த நீரின் நன்மைகளை தக்க வைத்துக் கொள்ள, அதற்கு பிறகு ஷாம்பு பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
சிறந்த பலன்களை பெற, அரிசி வடித்த நீரை வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம். அதிகமாக பயன்படுத்தினால், முடி வறண்டு போகக்கூடும். எனவே, சமநிலையை பராமரிப்பது முக்கியம்.
அரிசி வடித்த நீரில் இனோசிட்டால் (inositol) என்ற கார்போஹைட்ரேட் உள்ளது. இது முடியை வலுப்படுத்தி, அதன் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது. இதனால், முடி உதிர்வைத் தடுக்கிறது. இது உச்சந்தலையின் pH அளவை சமநிலைப்படுத்துகிறது. அத்துடன் அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை வழங்குவதன் மூலம் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது.
இந்த எளிய முறையை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்வதன் மூலம், காலப்போக்கில் முடி உதிர்வு குறைவதையும், பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான கூந்தலையும் நீங்கள் பெறலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]