herzindagi
tips for hair health

Hair growth: முடி வளர்ச்சிக்கு உதவும் ஆரோக்கிய உணவுகளின் லிஸ்ட்!

<span style="text-align: justify;">&nbsp;தலைமுடிக்கு வேரிலிருந்து ஆரோக்கியத்தை கொண்டு வந்தால் மட்டுமே எவ்வித பிரச்சனை இன்றி இருக்கக்கூடும்</span>
Editorial
Updated:- 2024-01-17, 21:14 IST

பெண்களின் முக அழகிற்கு ஈடாக அவர்களை மேலும் அழகு சேர்ப்பது தலைமுடி தான். கார்கூந்தல் உடையாள் என்பதற்கு ஏற்ப பெண்கள் தங்களது தலைமுடியை எப்போதும் அழகாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. மாடர்ன் கலாச்சாரம் என்ற பெயரில் முடிகளை வெட்டிக்கொண்டாலும் அவற்றையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்று தான் நினைப்போம். இதற்காக விதவிதமான ஷாம்புகளை உபயோகிப்பது, சீயக்காய் உபயோகித்தல் போன்ற பல்வேறு வழிமுறைகளை நாம் பின்பற்றுவோம். ஆனாலும் தலைமுடிக்கு வேரிலிருந்து ஆரோக்கியத்தை கொண்டு வந்தால் மட்டுமே எவ்வித பிரச்சனை இன்றி இருக்கக்கூடும். இதோ தலைமுடியை ஆரோக்கியமாக்க உதவும் உணவுகள் என்னென்ன என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளுங்கள்.

women hair growth ()

தலைமுடி ஆரோக்கியத்திற்கான உணவுகள்:

  • உங்களது தலைமுடிக்கு புரதம் அதிகளவில் தேவைப்படுகிறது.  உங்களது உணவில் போதுமான அளவு புரதம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எனவே உங்களது தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்றால், முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • தலைமுடியின் செல்கள் பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்றால் இரும்பு சத்து அத்தியாவசியமான ஒன்று. இரும்பு சத்து குறைபாடு ஏற்படும் போது தான், முடி உதிர்தல் பிரச்சனைகளை அதிகளவில் சந்திக்க நேரிடும். இது போன்ற சூழலில் நீங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பசலைக்கீரை உள்ளிட்ட அனைத்து வகையான கீரை வகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிங்க: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறுதானிய கட்லெட்!

  • முடி வளர்ச்சியை அதிகரிக்க நீங்கள் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, முடி தண்டுகளுடன் இணைக்கும் நுண் குழாய்களை வலிமையாக்குகிறது. இதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் சீராக எடுத்துச் செல்வதற்கு உதவுவதால், முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
  • கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற பயோட்டின் நிறைந்த தானியங்கள், உங்கள் முடி வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்களை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அன்றாட உணவு முறையில் இது போன்ற உணவுகளை நீங்கள் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • பெண்களுக்கு தலைமுடி விரைவாக வளர வேண்டும் என்றால், வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தினமும் நீங்கள் வைட்டமின் ஏ நிறைந்த கேரட் ஜுஸைக் குடிக்க வேண்டும். இது செல்லின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

hair growth tips for women

  • முடி ஆரோக்கியத்திற்கு உதவும் அற்புதமான உணவு முறையில் ஒன்றாக உள்ளது தயிர். இதில் உள்ள நிறைய புரதம், பி வைட்டமின்கள் மற்றும் வைட்டமின் டி  போன்ற  ஊ ட்டச்சத்து க்கள் உள்ளதால்  முடியின் வளர்ச்சிக்கு உதவியாக  உள்ளது.இது போன்று பெர்ரி பழங்கள், பீன்ஸ், மீன் போன்ற உணவுகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள மறந்துவிடாதீர்கள்.

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]