பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான். ஆனால் முறையான பராமரிப்பு இல்லாமல் தான் கண்களை சுற்றி கருவளையம் வருகிறது.. இது முகத்தின் அழகைக் கெடுப்பதோடு நமக்கும் ஏதோ உடல் நல பிரச்சனை உள்ளது போன்ற மனநிலையை ஏற்படுத்தும். இது போன்ற நிலை ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்றால் கண்களுக்கும் கொஞ்சம் அக்கறைக் கொடுக்க வேண்டும். இதற்காக சந்தைகளில் விற்பனை செய்யப்படும் ரசாயனப் பொருள்களை வாங்கி உபயோகிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் உள்ள உணவுப்பொருள்களைப் பயன்படுத்தியே உங்களது கண்களை அழகாக்க முடியும். இதோ எப்படி? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தைப் போக்க வேண்டும் என்றால் உருளைக்கிழங்கு ஐஸ் க்யூப் மசாஜை வாரத்திற்கு இருமுறை மேற்கொள்ளவும். உருளைக்கிழங்கில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் சருமத்தை எப்போதும் பளபளப்புடன் வைத்திருக்க உதவுவதோடு, கருவளைய பிரச்சனையைத் தீர்க்கவும் உதவுகிறது.
இந்த உருளைக்கிழங்கு ஐஸ் க்யூப் செய்வதற்கு முதலில், பெரிய உருளைக்கிழங்களை எடுத்து தோல் சீவி துருவிக் கொள்ளவும். ஒரு சிறிய பாத்திரத்தில் மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இரண்டையும் நன்கு கலந்துக் கொள்ளவும். இதையடுத்து ஐஸ் க்யூப் தயாரிக்கும் டப்பாவில் சிறிது சிறிதாக ஊற்றி பிரிட்ஜிக்குள் வைக்கவும். உருளைக்கிழங்கு கலவை ஐஸ் க்யூப் ஆக மாறியதும் எடுத்து பயன்படுத்தலாம். தினமும் இரவு தூங்கும் போது கண்களை சுற்றி மசாஜ் செய்துக் கொள்ளவும். இது உங்களது புத்துணர்ச்சியை அளிப்பதோடு சருமத்தையும் பாதுகாக்கும்.
அடுத்ததாக கருவளைய பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் வெள்ளரிக்காய் எண்ணெய் பயன்படுத்தவும். இதில் நீர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் சருமத்தை வறண்டு விடாமல் தடுப்பதோடு கருவளைய பிரச்சனையையும் தீர்க்க உதவுகிறது. இதை செய்வதற்கு முதலில் வெள்ளரிக்காயை தோல் சீவி நன்றாக துருவிக் கொள்ளவும். பின்னர் சல்லடைப் பயன்படுத்தி வெள்ளரி சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும். இந்த சாறுடன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்துக்கொண்டு தினமும் கருவளையம் உள்ள இடங்களில் நன்கு அப்ளை செய்து மசாஜ் செய்யவும். காலையில் செய்ய முடியவில்லை என்றாலும் இரவு தூங்கும் போது கூட இந்த எண்ணெய்யை நீங்கள் பயன்படுத்தலாம்.
கருவளைய பிரச்சனையிலிருந்து விடுபட தேன் மற்றும் காபி தூள் உங்களுக்கு சிறந்த தேர்வாக அமையும். ஒரு கிண்ணத்தில் தேன் மற்றும் காபி தூள் இரண்டையும் சேர்ந்து நன்கு கலந்துக் கொள்ளவும். பின்னர் இந்த கலவையை முகம் மற்றும் கருவளையம் உளள பகுதிகளில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்தால் போதும் முகம் பிரகாசமாக இருக்கும்.
இது போன்ற முறைகளில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி ஒரே வாரத்தில் கருவளைய பிரச்சனைகளிலிருந்து விடுபட முயற்சி செய்யுங்கள். இதோடு மட்டுமின்றி ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரமாவது நன்றாக தூங்க வேண்டும் மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]