பெண்களுக்குத் தலைமுடி எப்போதுமே ஒரு தனி அழகு தான். சில பெண்களுக்கு அடர்த்தியுடன் நீளமாகவும், சில பெண்களுக்கு அடர்த்தி குறைவாகவும் காணப்படும். என்னவாக இருந்தாலும் அவர்களுக்கு தனி அழகைச் சேர்க்கும் என்று தான் கூற வேண்டும். இவற்றை முறையாக பராமரிக்கிறோம் என கடைகளில் விற்பனை செய்யப்படும் ஹேர் மாஸ்க், ஷாம்பு போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். பெரும்பாலான தலைமுடி பராமரிப்பு பொருள்களில் தீங்கு விளைவிக்கும் இராசயனங்கள் உள்ளதால், முடி கொட்டுதல் பிரச்சனையும் அதிகரிக்கிறது. இப்படி விலைக்கொடுத்து வாங்கும் தலை முடி பராமரிப்புகளால் முடி கொட்டுதல் பிரச்சனையை சந்திக்கும் நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இதோ உங்களுக்கான முடி பராமரிப்பு டிப்ஸ் இது தான்.
மேலும் படிங்க: முகப்பரு வராமல் இருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்
நம்மில் பலரது வீடுகளில் செம்பருத்தி செடி கண்டிப்பாக இருக்கும். பார்ப்பதற்கு அழகாக மட்டுமல்ல, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் செம்பருத்தி கொண்டுள்ளது. ஆம் இதன் இலை மற்றும் பூ இரண்டுமே தலைமுடி பராமரிப்பிற்கு பேருதவியாக உள்ளது. இதோ இங்கே செம்பருத்திக் கொண்டு செய்யப்படும் ஹேர் மாஸ்க் எப்படி செய்யலாம் எனவும் அறிந்துக் கொள்ளுங்கள்.
முதலில் செம்பருத்தி பூக்கள் மற்றும் செம்பருத்தி இலைகளை ப்ரஷ்ஷாக பறிந்துக் கொள்ளவும். பின்னர் மிக்சி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். மென்மையான பேஸ்ட் பதம் வரும் வரை அரைத்துக் கொண்டு தலைமுடி வேரில் இருந்து தலைமுடியின் அடி வரை தடவிக் கொள்ளவும். சுமார் 30-40 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விட்டு பின்னர் சீயக்காய் அல்லது ஷாம்பு கொண்டு தலைமுடியை அலச வேண்டும். இப்படி தொடர்ச்சியாக வாரத்திற்கு இருமுறை அல்லது மாதம் ஒருமுறையாவது செம்பருத்திக் கொண்டு தயாரிக்கப்படும் ஹோர் மாஸ்க் பயன்படுத்தினால் போதும் தலைமுடி கொட்டும் பிரச்சனை அரவே இருக்காது.
இதோடு செம்பருத்தி ஹேர் மாஸ்க் செய்யும் போது செம்பருத்தி பூக்களுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு அரைத்து பேஸ்ட் போன்று கலந்துக் கொண்டு தலைமுடியில் நன்கு தடவிக் கொள்ளவும். பின்னர் சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு தலைமுடியை தண்ணீரில் அலசினால் போதும். செம்பருத்தியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்டகள், வைட்டமின்கள் உள்ளதால் தலைமுடி அடர்த்தியாக வளர்வதோடு, முடி கொட்டுதல் பிரச்சனையும் ஏற்பட வாய்ப்பில்லை.
மேலும் படிங்க: கருந்திட்டுகள் மறைந்து முகம் பளபளப்பாக ஒரு உருளைக்கிழங்கு மட்டும் போதுமாம்!
இதுபோன்று தலை முடி உதிர்தல் பிரச்சனைக்கு செம்பருத்தி பூ மற்றும் இலைகளை நீங்கள் உபயோகிக்கலாம். இதோடு மட்டுமின்றி செம்பருத்தி பூவை காய வைத்து எண்ணெய் கலந்து தினமும் தேய்த்து வரவும். இது தலைமுடியை இயற்கையான முறையில் பராமரிக்க உதவுதோடு முடி கொட்டுதல் பிரச்சனை இல்லாமல் தலைமுடியைப் பராமரிக்க முடியும்.
Image Source - Google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]