தீபாவளியன்று நீங்கள் போடும் மேக்கப் நீண்ட நேரத்திற்கு கலையாமல் இருக்க இந்த சிம்பிள் டிப்ஸ்களை ட்ரை பண்ணுங்க!!!

தோல் தயாரிப்பு, அழகுசாதன பொருட்கள் மற்றும் சரியான பராமரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், பண்டிகைக்கு பிந்தைய தோல் பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படாமல் தீபாவளி அன்று முழுவதும் நீங்கள் பிரகாசமாக தெரிய இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்.
image

தீபாவளி நெருங்கிகொண்டு இருக்கிறது, குடும்பக் கொண்டாட்டத்தில் அனைவரையும் விட அழகான தோற்றம் மற்றும் உற்சாகத்துடன் இந்த தீபாவளியை கொண்டாட மேக்கப் மிகவும் முக்கியமான ஒன்று. பண்டிகைக்கு மத்தியில், உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதும், கொண்டாட்டங்கள் முழுவதும் உங்கள் மேக்கப் குறைபாடற்றதாக இருப்பதை உறுதி செய்வதும் முக்கியம். நீண்ட நேரம் மேக்கப் கலையாமல் இருக்க இந்த தீபாவளி மேக்கப் தோற்றத்தில் முழுமை அடைவதற்கு உதவிக்குறிப்புகளை ட்ரை பண்ணுங்கள்.

தீபாவளியன்று மேக்கப் கலையாமல் இருக்க டிப்ஸ்

Untitled-design---2024-09-29T015005.466-1727554836248


ஸ்கின் ஹைட்ரேஷன்


உங்கள் தீபாவளி மேக்கப் சரியாக அமையவும் நீண்ட நேரம் கலையாமல் இருக்கவும், உங்கள் முகத்தை முதலில் கிளன்சிங் செய்து கொள்ளுங்கள். முடிந்தவரை டபுள் கிளன்சிங் செய்வது சிறந்தது. பின்னர் ஸ்கின் ஹைட்ரேஷன் செய்வதில் கவனம் செலுத்துங்கள். ஆயில் இல்லாத மாய்ஸ்டரைசரை பயன்படுத்துவது அனைத்து தோல் வகைகளுக்கும் முக்கியமானது.


வறண்ட சருமம் உள்ளவர்கள் ஹைட்ரேடிங் சீரம் பயன்படுத்துங்கள். இவர்கள் ஹைலூரோனிக் அமிலம் அல்லது கிளிசரின் கொண்ட மாய்ஸ்டரைசர்களை தேர்வு செய்யுங்கள். என்னை தன்மையுடைய மாயஸ்டரைசர்களை பயன்படுத்துவதை விட இவை சிறந்தவை.

பிரைமர்

உங்கள் அழகு சாதன பொருட்களில் மிகவும் முக்கியமானது பிரைமர். சிலிக்கான் இல்லாத மற்றும் தோலின் மென்மை தன்மையை பராமரிக்கும் ப்ரைமர்களை தேர்ந்தெடுங்கள் இது உங்கள் முகத்தில் எண்ணெய் வழிவதை தவிர்க்கிறது.

சன் ஸ்கிரீன்


அதிகப்படியான வெயில் மற்றும் மேக்கப் உங்கள் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம் மேலும், உங்கள் முகத்தில் உள்ள பிரேக் அவுட்டுகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக நீண்ட நேரம் மேக்கப் கலையாமல் இருக்க அழகு சாதன பொருட்களை பயன்படுத்தும் போது சன் ஸ்கிரீன் மிகவும் முக்கியமானது. அதிலும் எஸ் பி எப் உள்ள சன் ஸ்கிரீன்களை தேர்வு செய்யுங்கள் குறிப்பாக, பகல் நேர கொண்டாட்டத்திற்கு எஸ் பி எஃப் மிகவும் முக்கியமானது இது உங்களை UV பாதிப்பிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது.

பவுண்டேசன்

Untitled-design---2024-10-03T213301.545-1727971448147


மினரல் பவுண்டேஷங்கள் அல்லது பிபி க்ரீம்கள் உங்கள் பண்டிகை கால கொண்டாட்டத்திற்கு சிறந்த தேர்வுகள் ஆகும். இவை உங்கள் முகத்தில் உள்ள துளைகளை கவர் செய்யும். இது முகப்பரு பாதிப்பிற்குள்ளான சருமங்களுக்கு சிறந்தவை.


இயற்கையான பளபளப்பு

இயற்கையான பளபளப்பை அடைய ப்ளஷ்கள், ஹைலைட்டர்கள் போன்ற கிரீம் சார்ந்த தயாரிப்புகளை பயன்படுத்துங்கள். இந்த அழகு சாதன பொருட்கள் எளிதில் உங்கள் முகத்தில் பிலேண்ட் ஆகின்றன. மற்றும் உங்கள் முகத்தில் அதிக மேக்கப் இல்லாதது போல் இயற்கையான சருமமாக காட்சியளிக்க உதவுகின்றன. முக்கியமாக சருமத்திற்கு உகந்த, நச்சுத்தன்மையற்ற, நறுமணம் இல்லாத அழகு சாதன பொருட்களை தேர்ந்தெடுப்பது அவசியம்.


செட்டிங் ஸ்ப்ரே

kalkionline_2024-05_7d3c8610-be82-49e5-b2fa-f6f6c40658aa_spray

உங்கள் மேக்கப் ஐ நீண்ட நேரம் அப்படியே வைத்திருக்க செட்டிங்ஸ் ஸ்பிரே மூலம் உங்கள் தோற்றத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள். ரோஸ் வாட்டர்,ஆலோவேரா அல்லது கேமொமில் போன்ற ஈரப்பதமூட்டும் பொருட்களைக் கொண்ட செட்டிங் ஸ்பிரேக்களை பயன்படுத்துங்கள் அது உங்கள் மேக்கப் அப்படியே வைத்திருக்கும் மேலும் உங்கள் மேக்கப் கலைய விடாமல் நீண்ட நேரம் பாதுகாக்கும்.

டபுள் கிளின்சிங்

தீபாவளி கொண்டாட்டத்தின் முடிவில் உங்கள் மேக்கப் கலைக்கும்போது இரு முறை சுத்தம் செய்வது அவசியம். அதாவது உங்கள் முகத்தை டபுள் கிளன்சிங் செய்யுங்கள். இது உங்கள் முகத்தில் பிரேக் போச்சுகளை தவிர்க்க உதவும். டபுள் கிளின்சிங் முறைக்கு நீர் சார்ந்த கிளன்சரை பயன்படுத்தவும்.

மேலும் படிக்க: மேக்கப் செய்யும் போது ஃபவுண்டேஷனை இப்படி போட்டால் தான் அழகாக தோற்றமளிப்பீர்கள்!


இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள மேலும், இதுபோன்ற அழகு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள்- HerZindagi Tamil


image source: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP