ஒவ்வொருவரின் தலைமுடியும் குறிப்பிட்ட காலம் கழித்து வெள்ளையாகிவிடும். கருப்பு முடிக்கு இடையில் 3-4 முடிகள் வெள்ளையாக தோன்ற ஆரம்பிக்கும். இது வயதான அறிகுறிகளைக் குறிக்கிறது. இதை ஆங்கிலத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக் என்று சொல்வார்கள் சிலருக்கு இது மிகவும் பிடிக்கும். உங்களுக்கு வயதாகும்போது. முடி அதன் பளபளப்பையும் நிறத்தையும் இழக்கத் தொடங்குகிறது.
ஆனால், பலருக்கு 20 வயதிலேயே வெள்ளை முடி வர ஆரம்பிக்கிறது. இதை ஆங்கிலத்தில் premature graying (இளநரை) என்பார்கள். பிரபல தோல் மருத்துவர் டாக்டர் ஆஞ்சல் பந்த் இது தொடர்பான தகவல்களை அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், மெலனின் பற்றாக்குறையால் முடி வெள்ளையாகிறது என்று கூறியுள்ளார். மெலனின் என்பது முடிக்கு நிறத்தை கொடுக்கும் நிறமி. கண்கள் மற்றும் தோலின் நிறத்திற்கு இதுவே பொறுப்பு.
மெலனினை உருவாக்கும் ஸ்டெம் செல்கள் சிதைவடையும் போது அல்லது சேதமடையும் போது, முடி அதன் நிறத்தை இழக்கிறது, இதன் விளைவாக நரை முடிகள் தோன்றும்.
இப்போது கேள்வி என்னவென்றால், நரை முடியை மீண்டும் கருப்பாக மாற்றும் என்று கூறும் பொருட்கள் மற்றும் லோஷன்கள் சந்தையில் எத்தனை உள்ளன என்பதுதான். இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதையும் டாக்டர் பந்த் பதிவின் மூலம் கூறியுள்ளார். நீங்கள் அத்தகைய தயாரிப்புகளை வாங்கினால், அதைப் பயன்படுத்துவதற்கு முன், நிபுணரின் கருத்தை அறிந்து கொள்ளுங்கள்.
முதுமை மற்றும் மரபியல் காரணமாக உங்கள் முடி நரைத்தால், அதை மாற்றவோ நிறுத்தவோ முடியாது. மாறாக, மன அழுத்தத்தினால் நரை முடி உண்டானால், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சீரான உணவின் மூலம் இதனை குறைக்க முடியும். இருப்பினும், நரைத்த முடி மீண்டும் கருப்பாக மாறாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வைட்டமின் குறைபாடு முடி நரைப்பதற்கு மற்றொரு காரணமாகும். இரும்புச்சத்து, ஃபோலேட், பயோட்டின், வைட்டமின் B-6, வைட்டமின் B-12, வைட்டமின் D மற்றும் E போன்ற நுண்ணூட்டச் சத்துக்களின் குறைபாடு மயிர்க்கால்கள் நரைக்க வழிவகுக்கும். இது நிறமியை பாதிக்கிறது. மேலும், உங்கள் உணவில் இந்த பொருட்களை சேர்த்துக் கொண்டால், கருப்பாக முடி வளரும்.
மெலனினை உற்பத்தி செய்யும் செல்கள் மெலனோசைட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. உங்கள் முடிக்கு நிறத்தை கொடுக்கும் மெலனோசைட்டுகள், முடி வளரும் மயிர்க்கால்களில் காணப்படுகின்றன. காலப்போக்கில், மெலனோசைட்டுகள் மெலனினை மிக குறைவாக உற்பத்தி செய்கின்றன. இறுதியில் உற்பத்தி செய்வதை நிறுத்தியும் விடுகின்றன. மெலனின் இல்லாததால், உங்கள் முடி அதன் நிறத்தை இழக்கத் தொடங்குகிறது. நரை முடியில் மெலனின் குறையத் தொடங்குகிறது , அதே சமயம் வெள்ளை முடியில் அது முற்றிலும் இல்லாமல் போகிறது.
முடியை ஒவ்வொருவரும் வித்தியாசமாக பராமரிக்கின்றனர். ஆனால் சிலர் முடியைப் பற்றிய கட்டுக்கதைகளையும் பரப்புவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். வெள்ளை முடியைப் பற்றி இதுபோன்ற பல கட்டுக்கதைகள் உள்ளன, அவை நம்பக்கூடாதவை.
நரை முடி என்பது வயதாகும் செயல்முறையின் ஒரு பகுதியாகும். ஒவ்வொருவரும் வெவ்வேறு வயதில் இதை அனுபவிக்கிறார்கள். சில மருத்துவ நிலைகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் இளநரைக்கு காரணமாகும். தற்போதைய நிலையில், நரை முடியை மாற்ற அல்லது நிறுத்த பயனுள்ள சிகிச்சை எதுவும் இல்லை, எனவே அத்தகைய தயாரிப்புகளை நம்புவதைத் தவிர்ப்பது நல்லது.எந்தவொரு சப்ளிமெண்ட்டையும் எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்து பகிரவும். மேலும் இதுபோன்ற பதிவுகளைப் படிக்க, Herzindagi உடன் இணைந்திருங்கள்.
Images Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]