சிவபெருமானை வழிபடுவதை எப்படி சிவராத்திரி என்று கூறுவார்களோ அதே போன்று அம்பிகையை வழிபடுவதை நவராத்திரி என்று அழைப்பார்கள். ஒன்பது ராத்திரிகள் அம்பிகையை வழிபடும் விழாவை நவராத்திரி என்று கூறுவார்கள். நவராத்திரியை கொண்டாடுவதற்கும், கொலு வைத்து வழிபாடு நடத்துவதற்கும் ஒரு முறை இருக்கிறது. அவற்றை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: Kantha Sashti Viratham 2025: 48 நாள் கந்த சஷ்டி விரதம் தொடங்கும் நேரம்; விரத நாளில் முருகனை வழிபடும் முறைகள்
மகிசாசுரனை அம்பாள் வதம் செய்வதற்காக தவம் இருந்த ஒன்பது நாட்களை நவராத்திரி திருவிழா என்று கூறுவார்கள். மூன்று தேவிகளும் ஒன்றிணைந்து இந்த அசுரனை வதம் செய்ததாக புராணத்தில் குறிப்பிடப்படுகிறது. அதனடிப்படையில், நம்மிடம் இருக்கும் நல்ல குணங்களை ஒன்றிணைத்து, தீய குணங்களை அழிப்பதற்கு நம்மை நாமே பக்குவப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தும் வகையில் நவராத்திரியை பலரும் கொண்டாடுகின்றனர்.
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் நவராத்திரியை கொலு வைத்து கொண்டாடும் வழக்கத்தை கடைபிடிக்கின்றனர். பலருடைய வீடுகளில் பாரம்பரியமாக கொலு வைத்து வழிபாடு நடத்தும் முறை கடைபிடிக்கப்பட்டு வரும். எனினும், சிலர் முதன்முறையாக கொலு வைத்து வழிபாடு நடத்தலாம் என்று விருப்பப்படுவார்கள். அவர்கள் எல்லோரும் சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
மேலும் படிக்க: குறிப்பிட்ட வயதில் திருமண நடக்காமல் தடைப்பட்டு கொண்டு இருந்தால் இந்த கோவில்களுக்கு சொல்லுங்கள்
கொலுவை 3, 5, 7, 9 மற்றும் 11 படிகளில் வைத்து வழிபாடு செய்வார்கள். படிப்படியாக மனிதனின் வாழ்க்கை உயர்கிறது என்பதை விளக்கும் விதமாகவும் இதனை கருத்தில் கொள்ளலாம். மற்றொரு புறம், படிப்படியாக உயிரினங்கள் தோன்றியதன் வெளிப்பாடு எனவும், வாழ்வில் உயர்வு அடைய வேண்டுமென்றால் படிப்படியாக தான் செல்ல வேண்டும் என வாழ்வியல் நெறியை எடுத்துரைக்கும் விதமாகவும் கொலு குறித்து மக்கள் தங்கள் கருத்துகளை கூறுவார்கள்.
இந்த படிகளில் கொலு பொம்மைகளை அடுக்குவதற்கு என சில வழிமுறைகள் உள்ளன. அதனடிப்படையில், முதல் படியில் ஓரறிவு உயிரினங்களான மரம், செடி, கொடி ஆகியவற்றை அடுக்கலாம். இரண்டாம் படியில் ஈரறிவு உயிரினங்களான நத்தை, சங்கு போன்றவற்றை அடுக்கலாம். மூன்றாம் படியில் மூன்று அறிவு உயிரினங்களான கரையான் போன்றவற்றையும், நான்காம் படியில் நண்டு போன்ற உயிரினங்களையும் எடுக்கலாம்.
ஐந்தாவது படியில் பறவை, விலங்கு போன்றவற்றை அடுக்கலாம். ஆறாவது படியில் மனிதர்களின் பொம்மைகளை அடுக்கலாம். இதில் கல்யாண திருவிழா போன்ற காட்சிகளை மக்கள் அடுக்குவார்கள். ஏழாவது படி என்பது மனிதர்களில் இருந்து உயர்ந்த மகான்களை குறிக்கும். இதில் விவேகானந்தர், வள்ளலார் போன்றோரை வைக்கலாம். எட்டாவது படியில் அவதாரங்களான தசாவதாரம், மகாலட்சுமியின் அஷ்ட லட்சுமி அவதாரம் போன்றவற்றை அடுக்கலாம். ஒன்பதாவது படியில் மூன்று தேவியர்கள், மும்மூர்த்திகள் மற்றும் பூரண கலசம் போன்றவற்றை அடுக்கலாம்.
இந்த செயல்முறைகள் அனைத்தையும் சரியான வகையில் பின்பற்றுவதன் மூலம் நம்மால் கொலு அமைத்து நவராத்திரியை வீட்டில் கொண்டாட முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]