முகம் பார்க்கும் கண்ணாடி புதியது போல பளபளப்பாக மாற்ற இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க
S MuthuKrishnan
16-07-2025, 13:25 IST
gbsfwqac.top
உங்கள் வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடிகள் மங்கலாக இருக்கிறதா? அவற்றைப் புதியது போல பளபளப்பாக மாற்ற வெதுவெதுப்பான நீரில் 2 சொட்டு இதை சேருங்க
முகம் பார்க்கும் கண்ணாடிகள் மங்கலாக இருந்தால் முதலில் ஒரு ஈர துணியால் துடைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இரண்டு சொட்டு நீலம் சேர்த்துகொள்ளுங்கள்.
ஒரு சுத்தமான காட்டன் துணி அல்லது பஞ்சு வைத்து முகம் பார்க்கும் கண்ணாடியை அதை நன்கு துடையுங்கள்.
பின்னர் சிறிது திருநீறு எடுத்து அதனுடன் தண்ணீர் சேர்த்து முகம் பார்க்கும் கண்ணாடியில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் காய விடுங்கள்.
பின்னர், வீட்டில் உள்ள பழைய நியூஸ் பேப்பர்களை கொண்டு முகம் பார்க்கும் கண்ணாடியில் உள்ள திருநீறு கலவையை சுத்தமாக துடைத்துவிடுங்கள்.
பழைய கறைகளுக்கு டூத்பேஸ்ட்
கண்ணாடியில் விடாப்பிடியான கறை படிந்திருந்தால் கறைகள் மீது டூத்பேஸ்ட்டை அதன் மீது தடவி சற்று நேரம் காய விடுங்கள். பின்னர் ஒரு ஈர துணியால் துடைத்து எடுக்கவும்.