Surya Puja : சூரிய பகவானை வழிபட்டால் கிடைக்கும் நன்மைகள்

மகர சங்கராந்தியன்று சூரிய பகவானுக்கு ஏன் காணிக்கை செலுத்த வேண்டும் என அனைவரும் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்

Sun God

நடப்பாண்டின் முதல் இந்து பண்டிகையான உத்தராயணம் எனும் மகர சங்கராந்தி கொண்டாட்டத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. மகர சங்கராந்தி பண்டிகையானது சூரியபகவானின் வழிபாட்டுக்கு உரியது. இந்த பண்டிகையின் போது சூரிய பகவானுக்கு நீர் சமர்ப்பித்தல் வழியை இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்

பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் அறியப்படும் மகர சங்கராந்தி இந்து மதத்தில் மிக அதிக முக்கியத்துவம் கொண்ட பண்டிகையாகும். இது மிகவும் ஆடம்பரமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையை கொண்டாட சீரும் சிறப்புமாக சாஸ்திரங்கள் இருக்கின்றன. இதை பின்பற்றி சூரிய பகவானை வழிபட்டால் அவருடைய நல்லாசியை பெற முடியும்.

இந்த நாளில் சூரிய பகவானுக்கு காணிக்கை வழங்குவது அல்லது செலுத்துவது மங்களகரமானதாகவும் இன்றியமையாததாகவும் கருதப்படுகிறது. குறிப்பாகக் காலையில் காணிக்கை வழங்கினால் ஏற்கெனவே இருக்கும் பிரச்சினைகளில் இருந்து நீங்கள் விடுபடலாம், வாழ்க்கையில் வெற்றிகளைக் குவிக்கலாம்.

மகர சங்கராந்தியன்று சூரிய பகவானுக்கு எப்படி காணிக்கை வழங்க வேண்டும் என்ற சரியான முறையை இங்கே பகிர்ந்துள்ளோம்.

காணிக்கை விதி

மகர சங்கராந்தியன்று அதிகாலையில் எழுந்து பிரம்ம முஹூர்த்தத்தின் போது நீராடுங்கள் அதாவது குளித்து விடுங்கள். குளிக்க பயன்படுத்தும் நீரில் கங்கை நீரின் சில துளிகளை சேர்த்திடுங்கள். துளசி கிடைத்தால் அதையும் தண்ணீரில் சேருங்கள். இந்த நன்நாளில் சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும். அதன் பிறகு சூரியனை நோக்கி தியானம் செய்து சூரிய நமோஸ்து என 21 முறை உச்சரியுங்கள்.

கவனம் கொள்க

தூய்மையான ஆடைகளை உடுத்திய பிறகு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி சூரிய பகவானுக்கு காணிக்கை செலுத்த வெறுங்காலில் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். நீங்கள் இருக்கும் இடத்திலேயே மூன்று முறை சுற்றி வாருங்கள். இது சூரியனை சுற்றி வருவதைக் குறிக்கும் என்று நம்பப்படுகிறது.

சூரிய பகவானுக்கு காணிக்கை செலுத்திய பிறகு சூரிய மந்திரத்தைச் சொல்ல வேண்டும். அதாவது சிறப்பான எதிர்காலத்திற்கும், புதிய தொடக்கங்களுக்கும், நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்றிட ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தை உச்சரிக்க வேண்டும். சூரிய பகவானை நினைத்துக் கொண்டே ஏழை எளியோருக்கு உணவு, ஆடை போன்றவற்றை தானம் செய்யுங்கள்.

நடப்பாண்டு மகர சங்கராந்தியன்று சூரியனை வழிபடும்போது இந்த வழிமுறைகளைப் பின்பற்றி அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறுங்கள். எனினும் இவை அனைத்தும் பொதுவான பரிந்துரைகளே. உங்களுக்கு மேலும் சந்தேகங்கள் இருந்தால் ஜாதகத்தின் அடிப்படையில் ஆலோசனைகள் பெற நீங்கள் ஒரு ஜோதிட நிபுணரை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP