தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும் பண்டிகையான தைத் திருநாள் வந்தாலே அனைவருக்கும் மகிழ்ச்சியான சூழல் அமையக்கூடும். ஆண்களை விட பெண்களுக்கு பொங்கல் திருநாளில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். ஆனாலும் போகிப் பண்டிகைக்குள் வீட்டில் உள்ள பழைய பொருள்களை அப்புறப்படுத்தி சுத்தம் செய்வது அவர்களின் மிகப்பெரிய வேலையாகவே அமையக்கூடும்.
முன்பெல்லாம் பொங்கல் பண்டிகைக்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாக வீடுகளுக்கெல்லாம் வெள்ளை அடிக்க ஆரம்பிப்பார்கள். இப்பழக்கம் தற்போது இல்லை என்றாலும், வீடுகளில் உள்ள பொருள்களை எல்லாம் சுத்தமாக துடைத்தெடுக்கும் பழக்கம் உள்ளது. எனவே இந்த பண்டிகைக் காலத்தில் வீடுகளை சுத்தம் செய்வதற்கு முன்னதாக இந்த டிப்ஸ்களை கொஞ்சம் படித்துக்கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
வீடுகளைச் சுத்தம் செய்ய உதவும் டிப்ஸ்கள்:
- ஒவ்வொரு பெண்களுக்கும் வீடுகளைச் சுத்தம் செய்வது பெரும் சவாலான ஒன்று. அதிலும் சமையல் அறையில் உள்ள பொருள்களை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கு அதிகம் மெனக்கெடுவார்கள். இந்த பொங்கல் திருநாளில் கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட கண்ணாடி பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் சிறிதளவு நீரில் உப்பைக் கலந்துக்கொள்ளவும். பின்னர் அந்த உப்புக்கரைசலை ஒரு பேப்பரில் தொட்டு துடைக்கும் போது அனைத்துப் பொருங்களும் பளீச்சென்று மாறிவிடும்.
- பருப்பு வகைகள், கடுகு, மாவு போன்ற உணவுப் பொருள்களை வெவ்வேறு பாத்திரங்களில் போட்டு வைத்திருந்தால் அவற்றையும் இந்த உப்பு தண்ணீரைக் கொண்டு வெளியில் துடைக்கவும்.
- சமையல் அறைக்கு அடுத்தப்படியாக பெண்கள் சுத்தமாக வைத்திருக்க நினைப்பது ஹால், பெட்ரூம் போன்ற இடங்களில் தான். அங்கு உள்ள ஸ்கிரீன் துணிகள், பெட் ஷூட்டுகள் போன்றவற்றை மாற்ற வேண்டும்.
- பின்னர் சுடு தண்ணீரில் சோப்பு பவுடரைக் கலக்கிக் கொண்டு ஸ்கிரீன் துணிகள் மற்றும் பெட் ஷுட்டுகளைத் துவைப்பதற்கு முன்னதாக ஊற வைக்கவும். இவ்வாறு செய்யும் போது எண்ணெய் கறைகள் மற்றும் அழுக்குகள் விரைவில் போகக்கூடும்.
- வீட்டில் உள்ள பூஜை அறைகளை நீங்கள் சுத்தம் செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இருந்தால் முதலில் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரில் விளக்குகளை ஊற வைக்கவும். பின்னர் சாமி படங்களை ஒவ்வொன்றாக எடுத்து தனித்தனியாக துடைத்து வைக்கவும்.
- இதையடுத்து ஊற வைத்த விளக்குகளை எலுமிச்சை தோல் கொண்டு நன்கு தேய்த்துக் கழுவவும். பின்னர் சோப்புகளை வைத்து தேய்த்துக் கொள்ளவும். இது விளக்குகளில் உள்ள எண்ணெய் பிசுக்களை எளிதில் நீக்குவதற்கு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
- ஒவ்வொருவரின் வீடுகளிலும் பழைய புத்தகங்கள் மற்றும் பழைய பேப்பர்கள் அதிகளவில் இருக்கும். இவற்றில் தேவையானதை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை அப்புறப்படுத்திக் கொள்ளவும். இதையடுத்து தூசுகள் அதிகம் படியும் அலமாரி மற்றும் புத்தக அலமாரிகளில் உங்களது கவனத்தைச் செலுத்தவும்.

- அடுத்ததாக வீடுகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளை சுத்தம் செய்வதில் உங்களது கவனத்தைச் செலுத்தவும். அழுகும் நிலையில் காய்கறிகள் ஏதேனும் இருந்தால் அப்புறப்படுத்தவும். ஈரமான துணிகளை வைத்து துடைத்த பின்னதாக பொங்கல் திருநாளுக்குத் தேவைப்படும் பொருள்களை வாங்கி வைக்கவும்.
- இறுதியில் வீடுகளில் தண்ணீர் ஊற்றி அலசி விட்ட பின்னதாக தைத்திருநாளுக்கான காப்புச் செடி, வேப்பிலை, மாவிலை தோரணங்கள் கட்டி உங்களது வீடுகளை அலங்கரிக்கவும்.
மேலும் படிங்க:தைப் பொங்கலும் அதன் சுவாரஸ்சிய வரலாறும்!
இவ்வாறு இந்த போகிப்பண்டிகை நாளில் உங்களது வீடுகளை சுத்தம் செய்துக் கொள்ளுங்கள். பலருக்கு தூசி அலர்ஜி ஆகக்கூடும் என்பதால் மாஸ்க் அணிந்துக் கொள்வது நல்லது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation