அடுப்பு பர்னரில் படிந்த கரியை நீக்க முடியலையா? இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்
G Kanimozhi
16-07-2025, 15:20 IST
gbsfwqac.top
பர்னரில் கரி படிவது
நம் வீட்டில் உள்ள கேஸ் அடுப்பின் பர்னரில் கரி படிவதால் அதில் நாளடைவில் அடைப்பு ஏற்பட்டு தீ சரியாக எறிய முடியாமல் போகும்.
கரியை நீக்குவது எப்படி
நாம் எவ்வளவு முயற்சி செய்து துடைத்தாலும் இந்த கரி போகாது. ஆனால் நாங்கள் சொல்லும் இந்த டிப்ஸ்களை ட்ரை செய்து பாருங்கள் பர்னரில் உள்ள கரியை எளிதில் நீக்கிவிடலாம்.
தேவையான பொருட்கள்
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர் பாதி எலுமிச்சை சாறு ஒரு டேபிள் ஸ்பூன் சமையல் சோடா ஒரு டேபிள் ஸ்பூன் வினிகர் மற்றும் சிறிதளவு உப்பு
ஸ்டெப் 1
முதலில் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு சமையல் சோடா வினிகர் மற்றும் உப்பு சேர்ந்து நன்றாக கலக்க வேண்டும்.
ஸ்டெப் 2
அடுத்ததாக அடுப்பின் பர்னரை கழட்டி இந்த கலவையில் சுமார் மூன்று அல்லது நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
ஸ்டெப் 3
இந்த பர்னர் நன்றாக ஊறியதும் ஒரு பிரஷ் அல்லது நாறு வைத்து இதை நன்றாக தேய்த்து தண்ணீரில் கழுவுங்கள்
இப்படி செய்து வந்தால் பர்னரில் உள்ள கரி நீங்கி பளபளப்பாக புதுசு போல இருக்கும்.