வீட்டிலிருந்து ஈக்களை விரட்ட முடியலையா? இந்த சிம்பிள் டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!


G Kanimozhi
26-06-2025, 15:47 IST
gbsfwqac.top

எலுமிச்சை கிராம்பு

    ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து இரண்டாக நறுக்கி அதில் கிராம்புகளை நிற்க வைத்து ஒரு தட்டில் வைத்து, ஈக்கள் அதிகம் இருக்கும் இடங்களில் வைத்து விடுங்கள். இந்த வாசனை ஈக்களை வீட்டிலிருந்து விரட்டிவிடும்.

மிளகு நீர்

    கருப்பு மிளகை தண்ணீரில் கரைத்து அந்த தண்ணீரை வீட்டில் அதிகம் ஈக்கள் இருக்கும் இடத்தில் தெளிக்க வேண்டும். இது ஈக்களின் கண்களை தாக்கி ஈக்களை விரட்ட உதவும்.

கற்பூரம்

    ஒரு பெரிய கற்பூரத்தை வீட்டில் அதிக ஈக்கள் இருக்கும் இடத்தில் பற்ற வைக்க வேண்டும். இந்த கற்பூரத்திலிருந்து வெளியேறும் வாசனை காரணமாக ஈக்கள் வராது.

ஆப்பிள் சிடார் வினிகர்

    இந்த ஆப்பிள் சீடர் வினிகரை சோப்பு நீரில் கரைத்து உங்கள் வீட்டில் ஈக்கள் அதிகம் இருக்கும் இடத்தில் தெளித்தால் போதும், இனிமேல் ஈக்கள் தொல்லை இருக்காது.

எலுமிச்சை மற்றும் உப்பு

    எலுமிச்சை சாறு எடுத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு கிளாஸ் தண்ணீர் கலந்து வீட்டில் ஈக்கள் அதிகம் இருக்கும் இடத்தில் ஸ்பிரே செய்து விடுங்கள்.

புதினா மற்றும் துளசி

    புதினா இலைகள் மற்றும் துளசியை அரைத்து தண்ணீரில் கலந்து வீட்டில் ஸ்பிரே செய்ய வேண்டும். இதன் கடுமையான வாசனை தாங்க முடியாமல் ஈக்கள் ஓடிவிடும்.

    இது போன்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தில் இணைந்திருங்கள்.