அழுத்தி தேய்க்காமல் பூஜை பாத்திரங்கள் பளபளக்க இந்த 3 பொருள் போதும்
S MuthuKrishnan
07-06-2025, 07:24 IST
gbsfwqac.top
வீட்டில் நல்ல நாள் அம்மாவாசை பௌர்ணமி வெள்ளிக்கிழமை உன்னிடம் நாட்களில் பூஜை பொருட்களை சுத்தம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள் என்றாலும் சிறிது நாட்கள் சென்றவுடன் பூஜை பாத்திரங்கள் கருத்து விடும். அப்படி கருத்து மங்கலாக உள்ள உங்கள் பூஜை பாத்திரங்களை புதிது போல மின்ன வைக்க இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க.
பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு முன்பு அவற்றில் இருக்கும் எண்ணெய் பிசுக்குகள் மற்றும் சந்தனம் குங்குமத்தை ஒரு துணியால் துடைத்துக் கொள்ளவும்.
பின்னர் பூஜை பாத்திரங்களை தண்ணீரில் சிறிது கழுவி லிக்விட் சோப் ஆயில் கொண்டு ஒரு முறை கழுவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் எலுமிச்சம் பழ அளவு புளியை ஊற வைத்து நன்கு கெட்டியாக கரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். புளி கரைசலுடன், ஒரு ஸ்பூன் உப்பு இரண்டு ஸ்பூன் பச்சரிசி மாவு கலந்து கொள்ளுங்கள்.
இப்போது பூஜை பாத்திரங்களை பளபளக்க வைக்கும் பேஸ்ட் தயார். இந்த பேஸ்டை உங்கள் பூஜை பாத்திரங்கள் மீது விரல்களைப் பயன்படுத்தி அப்ளை செய்து கொள்ளுங்கள். பூஜை பாத்திரம் முழுவதும் இந்த பேஸ்ட்டை அப்ளை செய்து கொள்ளுங்கள்.
பின்னர் 2 நிமிடங்கள் கழித்து ஸ்க்ரப் வைத்து மீண்டும் பூஜை பாத்திரங்களை நன்கு தேய்க்கவும். தண்ணீரில் பூஜை பாத்திரங்களை கழுவவும் இப்போது உங்கள் பூஜை பாத்திரம் புதிது போல பளபளக்கும்.
குறிப்பு பூஜை பாத்திரங்களை கழுவும் பொழுது நல்ல தண்ணீரில் கழுவுங்கள். மற்றும் பூஜை பாத்திரங்களை கழுவியவுடன் ஒரு துணியால் துடைத்துவிட்டு சிறிது திருநீறு எடுத்து துணியால் தொட்டு பூஜை பாத்திரங்கள் மீது தடவி கொள்ளுங்கள். இப்படி செய்வதால் உங்கள் பூஜை பாத்திரங்கள் நீண்ட நாள் கருக்காமல் இருக்கும்.