ஃபிரிட்ஜ் ஃப்ரீசரில் இப்படி ஐஸ்கட்டிகள் மலைபோல் உறைந்துள்ளதா? உங்களுக்கான டிப்ஸ்
S MuthuKrishnan
14-07-2025, 09:22 IST
gbsfwqac.top
குளிர்சாதன பெட்டி பராமரிப்பு குறிப்புகள்: உங்கள் குளிர்சாதன பெட்டி அடிக்கடி ஃப்ரீசரில் ஐஸ் கட்டிக் கொள்கிறதா? இதனால் உங்கள் குளிர்சாதன பெட்டியில் என்ன நடக்கும் என தெரியுமா? அதை எப்படி சரி செய்யலாம் என இங்கு பார்க்கலாம்.
உங்கள் குளிர்சாதன பெட்டி அடிக்கடி ஃப்ரீசரில் ஐஸ் கட்டிக் கொள்கிறதா? அப்படியென்றால் அதன் அமைப்பை மாற்ற வேண்டும், ஏனெனில் இந்த நேரத்தில் காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும். இது குளிர்விப்பிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதற்கு முக்கிய காரணம் அவை மேனுவலாக ஐஸ் கட்டிகளை நீக்கும் ஆப்ஷனைக் கொண்டுள்ளன. இந்தப் பனிக்கட்டி அடுக்கு குளிர்சாதனப் பெட்டியின் செயல்திறனைக் குறைப்பது மட்டுமல்லாமல், சில சமயங்களில் கதவும் சரியாக மூடப்படுவதிலும் பாதிப்பை உண்டாக்குகிறது.
குளிர்சாதன பெட்டி கதவை அடிக்கடி திறக்காதீர்கள். மீண்டும் மீண்டும் திறப்பதால் சூடான காற்று உள்ளே நுழையும், இதன் காரணமாக ஈரப்பதம் உறைந்து பனியாக மாறும்.
சீலிங்கைச் சரிபார்க்கவும், கேஸ்கெட் (ரப்பர் சீல்) மோசமாக இருந்தால் குளிர்ந்த காற்று வெளியேறி ஈரப்பதம் உள்ளே செல்லும். எனவே அதை அவ்வப்போது கவனித்து சுத்தமாக வைத்திருங்கள். பழுதடைந்திருந்தால் உடனே மாற்றவும்.
சூடான பொருட்களை ஃபிரிட்ஜில் வைக்காதீர்கள்; வெளியில் வைத்து நன்கு குளிர்ந்த பின்னரே ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். நீராவியை வெளியிடும் பொருட்களை குளிர்ச்சியாகவும், ஈரப்பதம் பரவாமல் இருக்க மூடியும் வைக்கவும்.
குளிர்சாதன பெட்டியை ஓவர்லோட் செய்ய வேண்டாம். தேவைக்கு அதிகமாக பொருட்களை வைத்திருப்பது காற்று ஓட்டத்தைத் தடுத்து குளிர்சாதன பெட்டியில் அதிக சுமையை ஏற்படுத்துகிறது.
பனி நீக்கும் முறையைப் பயன்படுத்தவும், வாரத்திற்கு ஒரு முறை மேனுவலாக ஐஸ்கட்டிகளை நீக்கும் செய்முறையை செய்யவும். இதனால் பனிக்கட்டி உறைவதை தடுக்கலாம்.
தெர்மோஸ்டாட்டை சரியான வெப்பநிலையில், 3 முதல் 5 டிகிரி செல்சியஸில் வைத்திருங்கள்; மிகக் குறைந்த வெப்பநிலை அதிக பனிக்கட்டிகளை உருவாக்கும்.