period pain: மாதவிடாய் வலியை போக்கும் அற்புதமான உணவுகள் எவை தெரியுமா?
Balakarthik Balasubramaniyan
15-11-2022, 11:49 IST
gbsfwqac.top
பொதுவாக, பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் தாங்க முடியாத வலியை சந்திக்க நேரிடும். ஒவ்வொரு மாதமும் இந்த பிரச்சனை பெண்களுக்கு இருக்கும். ஆனால், இனிமேல் அதை கண்டு கவலைப்பட வேண்டாம். இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும். மாதவிடாய் வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
Image Credit : freepik
கீரை வகைகள்
மாதவிடாயின்போது இரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். வயிற்று வலியும் இருப்பதால் மிகவும் சோர்ந்து காணப்படுவீர்கள். எனவே கீரையை சேர்த்துக்கொள்வது நல்லது. இது மாதவிடாய் சமயத்தில் நீங்கள் இழக்கும் இரத்தத்தை மீண்டும் பெற உதவுகிறது. மேலும், வலிக்கு சிறந்த நிவாரணமாகவும் உள்ளது.
Image Credit : freepik
தயிரும், சாதமும்
மாதவிடாயின் போது கடுமையான வலியா? நீங்கள் தயிரையும், சாதத்தையும் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இவை இரண்டையும் ஒரே சமயத்தில் சாப்பிடும்போது வலி குறையும்.
Image Credit : freepik
வைட்டமின் B6 மற்றும் பொட்டாசியம்
வயிற்று வலியும், வயிற்றில் தசை பிடிப்பும் உங்களுக்கு இருக்குமெனில், அன்னாசி, வாழைப்பழம் மற்றும் கிவி போன்ற வைட்டமின் B6, பொட்டாசியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
Image Credit : freepik
கால்சியம் நிறைந்த உணவுகள்
மாதவிடாயின்போது வரும் கடுமையான வலியை சமாளிக்க கால்சியம் உதவுகிறது. மாதவிடாய் வயிற்று தசை பிடிப்பினை இது குறைக்கிறது. நீங்கள் பால், பாலாடைக்கட்டி போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
Image Credit : freepik
முட்டை சாப்பிடுதல்
மாதவிடாயின்போது வரும் வயிற்று தசைப்பிடிப்புக்கு முட்டை மிகவும் நல்லது. இதனில் சிறந்த அளவிலான புரதச்சத்து, வைட்டமின் B6, வைட்டமின் D மற்றும் வைட்டமின் E போன்றவை உள்ளது.
Image Credit : freepik
சாக்லேட் சாப்பிடுதல்
சாக்லேட்டில் நார்ச்சத்தும், மெக்னீசியமும் உள்ளது. இதனை சாப்பிடுவதால் மாதவிடாய் வலி குறையும். இதனில் 85 சதவீதம் அல்லது அதற்கு கூடுதலான அளவு கொக்கோ இருப்பதால் மாதவிடாய் வலிக்கு மிகவும் நல்லது.
Image Credit : freepik
சாமந்தி டீ
இது உடலுக்கு மிகவும் நன்மை அளிக்கக்கூடியதாகும். இதனை மாதவிடாயின்போது குடிப்பதால் வலிக்கு நிவாரணம் அளிக்கும்.
Image Credit : freepik
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.