ரோஜா செடியில் பூக்கள் பூத்து குலுங்க வெந்தயம் ஒன்னு போதும்
S MuthuKrishnan
05-06-2025, 12:07 IST
gbsfwqac.top
அனைவருக்கும் வீட்டில் ரோஜா செடி வளர்ப்பது என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் நாம் வளர்க்கும் ரோஜா செடியில் பூக்கள் பூப்பது மிகவும் கடினம். வீட்டில் வளர்க்கும் ரோஜா செடியில் பூக்கள் பூத்துக் குலுங்க வெந்தயம் ஒன்னு போதும்.
முதலில் வெந்தயத்தை நல்ல தண்ணீரில் ஊற வைக்கவும். ஊற வைத்த வெந்தயத்தை 5 நாட்கள் அப்படியே விட்டு விடுங்கள்.
5 நாட்கள் கழித்து வெந்தயத்தை பார்த்தால் அது தண்ணீரில் நன்கு ஊறி இருக்கும். இப்போது வெந்தயத்தையும் தண்ணீரையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
வெந்தயத்தையும் தண்ணீரையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளவும். நீங்கள் அரைத்த வெந்தயம் மாவு பதத்திற்கு நன்கு பேஸ்ட் ஆக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இப்போது அரைத்து வைத்த வெந்தைய பேஸ்டுடன் சிறிது தண்ணீர், ஒரு கப் தயிர், 1/2 ஸ்பூன் காபி தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
கலந்து வைத்த வெந்தைய பேஸ்ட்டை ஐந்து நாட்கள் அப்படியே விட்டு விடுங்கள். ஐந்து நாட்கள் கழித்து வெந்தயம் பேஸ்ட் நன்கு உப்பி நிற்கும்.
இந்த வெந்தைய பேஸ்டுடன் 2 லிட்டர் தண்ணீர் கலந்து நீங்கள் வீட்டில் வைத்துள்ள ரோஜா செடியின் மண்ணை களைத்து விட்டு உள்ளே வெந்தய பேஸ்ட் கலந்து வைத்த தண்ணீரை ஊற்றவும்.
இப்படி செய்து பாருங்கள் சரியாக ஒரு வாரத்தில் உங்கள் ரோஜா செடி மொட்டு பிடிக்க ஆரம்பிக்கும். ஒரு மாதத்தில் உங்கள் ரோஜா செடி பூத்து குலுங்கும்.