தேனீக்களுக்கு வாசனை உணர்வு அதிகம். இரண்டு பல் பூண்டை இடித்து அரை டம்ளர் தண்ணீரில் கலந்து தேன் கூட்டிலும், வீடு முழுக்கவும் ஸ்ப்ரே செய்யவும். தேனீக்கள் வீட்டை அண்டாது.
இலவங்கப்பட்டை தண்ணீர்
தேனீக்களுக்கு இலவங்கப்பட்டையின் வாசனை துளியும் பிடிக்காது. எனவே தேன் கூட்டை கலைக்க இலவங்கப்பட்டையை தண்ணீரில் ஊறவைத்து பயன்படுத்தவும்.
சிட்ரோனெல்லா மெழுகுவர்த்தி
தேனீக்களுக்கு நறுமணப் பொருட்களை பிடிக்காது. தேன் கூட்டின் அருகே சிட்ரோனெல்லா மெழுகுவர்த்தி பொருத்தி வைக்கவும். இரவு நேரத்தில் இதை செய்யுங்கள்.
அந்துருண்டை
தேன் கூட்டின் அருகே இரண்டு அந்துருண்டை வைக்கவும். அந்துருண்டையின் வாசனையை முகர்ந்து தேனீக்கள் தெறித்து ஓடும்.
புகை போடுவது
தேன் எடுப்பதற்கு புகை போடும் வழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது. இதை பாதுகாப்பான முறையில் செய்ய வேண்டும்.
மேற்கண்டை முறைகளில் தேனீக்களை கொல்லாமல் பாதுகாப்பான முறையில் வீட்டில் இருந்து தேனீக்களை விரட்டலாம்.