ஆப்பிள் சாப்பிடும் போது இந்த தவறுகளை எப்போதும் செய்யாதீர்கள், உடல்நல பிரச்சனைகள் வரும்!
G Kanimozhi
24-07-2025, 22:29 IST
gbsfwqac.top
ஆப்பிளின் ஊட்டச்சத்து
ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி வைட்டமின் பி6 பொட்டாசியம் இரும்புச்சத்து மெக்னீஷியம் கால்சியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு அதிகளவில் நன்மைகளை அளிக்கிறது.
ஆப்பிளை எப்போது சாப்பிடக்கூடாது?
ஆப்பிள் நம் உடலுக்கு பல நன்மைகளை கொடுத்தாலும் அவற்றை சரியான நேரத்தில் சாப்பிடவில்லை என்றால் உடல் நல பிரச்சனைகள் ஏற்படும். எனவே ஆப்பிளை எந்த நேரத்தில் சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.
வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது
ஆயுர்வேதத்தின் படி ஆப்பிளை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகிறது. வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிட்டால் மலச்சிக்கல் வாயு தொல்லை போன்ற வயிறு பிரச்சனைகள் ஏற்படும்.
மாலையில் சாப்பிடக்கூடாது
மாலை 6:00 மணிக்கு மேல் ஆப்பிள் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் மாலையில் செரிமான அமில அளவு குறைவதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
தோல் நீக்க கூடாது
ஆப்பிள் பழத்தை சாப்பிடும் போது தோலை அகற்றிவிட்டு சாப்பிடக்கூடாது. ஏனென்றால் ஆப்பிள் தோலில் பல அத்தியாவசிய ஊட்டசத்துக்கள் உள்ளது.
எப்போது சாப்பிடலாம்?
காலை உணவுக்கு ஒரு மணி நேரம் பிறகு அல்லது மதிய உணவு சாப்பிட்டு ஒரு மணி நேரம் பிறகு ஆப்பிளை சாப்பிடலாம்.
சிறந்த ஸ்னாக்ஸ்
காலை மற்றும் மதிய உணவுக்கு நடுவே சிற்றுண்டி ஆக ஆப்பிளை நீங்கள் சாப்பிடலாம். ஆப்பிளின் இயற்கை சர்க்கரை உடலுக்கு விரைவான ஆற்றலை தரும்.