நமது சிறு வயதில் அம்மா நமக்கு உணவு ஊட்டியது ஞாபகம் இருக்கா. நமக்கு விருப்பமான எல்லாவற்றையும் அம்மா செய்கிறார்கள். நனது குழந்தைப் பருவத்தில் மட்டுமல்ல தன் வாழ்நாள் முழுவதும் நம்மை கவனித்துக் கொள்வது போல அன்னையின் உணவு முதல் பானம் வரை அனைத்துத் தேவைகளையும் கவனிப்பதும் நம் கடமையாகும். வயது ஏற ஏற உடல் பலவீனமடையத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தாயின் உடல் நலனில் அக்கறை காட்டுவது நமது பொறுப்பு. எனவே இந்த அன்னையர் தினத்தில் உங்கள் தாயின் உணவில் சில சிறப்பு மாற்றங்களைச் செய்யுங்கள். 55 வயதிற்குப் பிறகு தாயின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அவர்களின் உணவில் சில சிறப்பு விஷயங்களைச் சேர்க்க வேண்டும். இதுகுறித்து உணவு நிபுணர் நந்தினி கூறியுள்ளார். அவர் ஒரு சான்றளிக்கப்பட்ட உணவியல் நிபுணர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்.
பால் பொருட்கள்
55 வயதிற்குப் பிறகு பெண்கள் தங்கள் உணவில் கால்சியத்தின் அளவை அதிகரிக்க வேண்டும். இதனால் எலும்புகள் பலவீனமடைவதைத் தடுக்கலாம். கூடுதலாக மாதவிடாய் நின்ற பிறகு கால்சியம் குறைவால் எலும்பு முறிவுகள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கலாம். பால் மற்றும் பால் பொருட்கள் தவிர, பருப்பு வகைகள், பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் சோயாபீன் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
வைட்டமின் டி நிறைந்த உணவை
வைட்டமின் டி குறைபாடு காரணமாக வயதான காலத்தில் சோர்வு மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தும். இதைக் குறைக்க வைட்டமின் டி நிறைந்த பால், முட்டை போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது தவிர கண்டிப்பாக வெயிலில் சிறிது நேரம் உட்கார வேண்டும்.
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலி பெண்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக வயதான காலத்தில் நார்ச்சத்து நிறைந்த உணவு செரிமானத்தை சீராக பராமரிக்க பயனுள்ளதாக இருக்கும். இது நீரிழிவு மற்றும் இதய நோய்களையும் தடுக்கிறது.
நட்ஸ்கள் மற்றும் விதைகள்
பெண்கள் தங்கள் வயதின் ஒவ்வொரு நிலையிலும் நட்ஸ்கள் மற்றும் விதைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக வயதை அதிகரிப்பதால் உடலுக்கு ஆற்றாலை தருகின்றது. இருப்பினும் பல பெண்களுக்கு நட்ஸ்கள் மற்றும் விதைகள் ஜீரணிக்க கடினமாக இருக்கலாம். ஆதனால் ஊறவைத்த பருப்புகளை சிறிய அளவில் சாப்பிடலாம்.
மேலும் படிக்க: 1 மாதம் மது அருந்தாமல் இருந்தால் உடலில் நடக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?
பச்சை இலை காய்கறிகள்
வயது அதிகரிக்கும் வேலையில் பச்சைக் காய்கறிகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். இது வைட்டமின்-பி12, நார்ச்சத்து மற்றும் உடலில் உள்ள பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டை பூர்த்தி செய்கிறது. காய்கறி சூப்பும் பயனுள்ளதாக இருக்கும்.''
இந்த அன்னையர் தினத்தில் உங்கள் தாயின் உடல்நலத்தை காக்க உணவுகளில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். மேலும் அவர்களின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், தயவுசெய்து பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation