
சிறுநீர்ப்பாதை தொற்று என்பது பெண்களிடையே பொதுவாக காணப்படும் பாக்டீரியா தொற்று ஆகும். சுமார் 60 சதவீதம் பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது சிறுநீர்ப்பாதை தொற்றால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த கடுமையான தொற்று ஏற்படும்போது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், துர்நாற்றம் வீசும் சிறுநீர் மற்றும் வயிற்று வலி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
மேலும் படிக்க: மலச்சிக்கல் முதல் செரிமான பிரச்சனை வரை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கிவி பழத்தின் நன்மைகள்
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மருத்துவர்கள் இந்த நோய்த் தொற்றுக்கு சிகிச்சையளிக்க அன்டிபயோடிக்ஸ் பரிந்துரைக்கின்றனர். இந்த மருந்துகள் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்க உதவுகின்றன. கடுமையான சிறுநீர்ப்பாதை தொற்று உள்ளவர்களுக்கு அன்டிபயோடிக்ஸ் சிறந்த சிகிச்சை முறையாகும். இருப்பினும், அறிகுறிகள் லேசாக இருந்தால், சில எளிய வீட்டு வைத்திய முறைகளையும் பின்பற்றலாம் என்று கூறப்படுகிறது. அவற்றை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தண்ணீர், சிறுநீர்ப்பாதை தொற்று உட்பட பல உடல்நல பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைகிறது. உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்து கொள்வது, தொற்றை தடுப்பதுடன், குணப்படுத்தவும் உதவுகிறது. நிறைய தண்ணீர் குடிக்கும் போது, சிறுநீர் நீர்த்துப்போகிறது. இதனால், நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பீர்கள். இது, தொற்றை ஏற்படுத்தும் அனைத்து பாக்டீரியாக்களையும் வெளியேற்ற உதவும்.

ப்ரோபயாடிக்குகள், செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஒழுங்குப்படுத்தும் நுண்ணுயிரிகள் ஆகும். சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்படும்போது, நல்ல பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, ஈ.கோலை போன்ற கெட்ட பாக்டீரியாக்கள் பெருகுகின்றன. ப்ரோபயாடிக் உணவுகள், இந்த கெட்ட பாக்டீரியாக்களை நீக்கி, நல்ல பாக்டீரியாக்களை மீட்டு, சமநிலையை மீட்டெடுக்க உதவும்.
மேலும் படிக்க: உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்போ பூசணிக்காய் ஜூஸை இந்த நேரத்தில் குடிங்க
வைட்டமின் சி, நாள்பட்ட நோய்களை தடுத்து, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, உடலில் உள்ள யூரிக் அமில அளவைக் குறைப்பது உட்பட பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. சிறுநீர்ப்பாதை தொற்றை பொறுத்தவரை, வைட்டமின் சி உட்கொள்வதை அதிகரிப்பது, சிறுநீரின் அமிலத்தன்மையை உயர்த்தி, தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அகற்ற உதவும். ஆரஞ்சு, திராட்சை, கிவி ஆகியவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

சிறுநீர்ப்பாதை தொற்றின் போது நீங்கள் எப்போதும் மனதில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம், சிறுநீரை ஒருபோதும் அடக்கக் கூடாது. எவ்வளவு அசௌகரியமாக இருந்தாலும், சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வரும் போது உடனடியாக சிறுநீர் கழித்து விடுங்கள். சிறுநீரை அடக்கி வைப்பது பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவிக்கும். எனவே, சிறுநீர்ப்பையை முழுமையாக காலி செய்வது மிகவும் முக்கியம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]