பாதாம் பருப்பு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என பெரும்பாலான மக்களுக்கு தெரியும். ஆனால் அவை என்ன என்பது குறித்து முழுமையாக தெரியுமா ? பாதாம் பருப்புகளில் கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவை உள்ளன
பாதாமின் ஆரோக்கிய நன்மைகள்
பாதாம் வழங்கும் ஊட்டச்சத்து உங்கள் உடலுக்கு பல வழிகளில் பயனளிக்கும். உங்கள் இதயம், எலும்புகள் அல்லது லிபிடோவை வலுப்படுத்த நீங்கள் விரும்பினால் அதற்கு பாதாம் உதவக்கூடும்.
கெட்ட கொழுப்பு குறையும்
பாதாம் சாப்பிடுவது குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL) எனப்படும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது மற்றும் நல்ல வகையான உயர் அடர்த்தி கொழுப்புப்புரதத்தின் (HDL) அளவை அதிகரிக்க உதவுகிறது. இதய நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் பாதாமில் உள்ளன.
ஆரோக்கியமான உடல் எடை
பாதாமில் கலோரிகளில் அதிகமாக இருந்தாலும் அவை எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் அபாயத்தைக் குறைக்க உதவும். பாதாமில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து உங்களை விரைவாக முழுதாக உணர உதவுகிறது. எனவே பாதாம் உங்கள் பசியை திருப்திப்படுத்தும் அதே வேளையில் கலோரி உட்கொள்ளலை சிறப்பாகக் கட்டுப்படுத்தும்
குறைந்த இரத்த அழுத்தம்
பாதாமில் உள்ள வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் கால்சியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். இது இதய நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது.
மேலும் படிங்கRoasted Chana benefits : உப்புக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
எலும்புகளை வலுவாக்கும்’
பாதாமில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இரண்டும் உள்ளது. இவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
இரத்த சர்க்கரை கட்டுப்பாடு
உணவு சாப்பிட்ட பிறகு உடலில் அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பாதாம் உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு முக்கியமானதாகும்.
குடல் ஆரோக்கியம் மேம்பாடு
உங்கள் இரைப்பைக் குழாயின் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதுகாக்க பாதாம் உதவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கண்களுக்கு நல்லது
கேரட் உங்கள் கண்களுக்கு மிகவும் நல்லது என கூறப்பட்டாலும் பாதாமில் உள்ள அதிகளவு வைட்டமின் ஈ உங்கள் கண்களைப் பாதுகாக்கிறது. ஆனால் பாதாமை அளவுக்கு அதிகமாக உட்கொள்ள வேண்டாம். ஏனெனில் இது எடை அதிகரிக்க வழிவகுக்கும். பாதாம் பருப்பை அளவோடு சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
மேலும் படிங்கHealth Benefits of Prunes : ஊட்டச்சத்து நிறைந்த கொடிமுந்திரி
சருமத்தை வளர்க்கிறது:
பெரும்பாலான தோல் தயாரிப்புகளில் பாதாம் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். சருமத்திற்கான நிறைய நன்மைகளைக் பாதாம் கொண்டிருப்பதே இதற்குக் காரணம். பாதாமில் க்ரீன் டீ மற்றும் ப்ரோக்கோலியில் உள்ள ஃபிளாவனாய்டு உள்ளது. இந்தக் கூறு உங்கள் சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது மற்றும் இது உங்கள் சருமத்திற்கான வயது எதிர்ப்புப் பண்பை கொண்டது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation