Remove Dandruff : குளிர்காலத்தில் பொடுகு பிரச்சினையா ? கற்றாழையை பயன்படுத்தி கவலையை தீர்த்திடுங்கள்

குளிர்காலத்தில் இன்னல்களை ஏற்படுத்தும் பொடுகு பிரச்சினை! தீர்வு தரும் கற்றாழை தாவரம் ! விரிவான தகவல்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

one

குளிர்காலத்தில் ஏற்படும் காய்ச்சல் உள்ளிட்ட உடல்ரீதியான பிரச்சினைகள் போலவே பொடுகு தொல்லையும் நமக்குக் கவலையை அளிக்கும். இப்பிரச்சினைக்கு கற்றாழை மூலம் எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதை இந்தக பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

குளிர்காலம் தொடங்கிய உடனேயே நம்மில் பெரும்பாலானோருக்கு காய்ச்சல், ஜலதோஷம் ஆகியவற்றால் உடல்நலன் பாதிப்பு ஏற்படும் வேளையில் இலவச இணைப்பாகப் பொடுகு தொல்லையும் வந்து விடும். இதற்கான முக்கிய காரணம் குளிர்காலமானது ஈரப்பதம் இல்லாத வறண்ட காற்றுடன் வருகிறது. குளிர்காலத்தில் பொதுவாகச் சருமம் வறண்டே இருக்கும் என்பதால் செதில்கள் அதிகரித்து விடுகின்றன. இதன் விளைவாகத் தோல் மற்றும் உச்சந்தலையில் வறட்சி ஏற்படுகிறது. உச்சந்தலை வறண்டு இருக்கும்போது செதில்கள் உண்டாகி, அது பொடுகு வளர எளிதாகிறது.

உச்சந்தலையில் தென்படும் வெள்ளை நிற செதில்களாகக் குளிர்காலங்களில் நமக்கு மோசமான அனுபவத்தைத் தரும். இவற்றைக் குறைப்பது எப்படியெனப் பீகாரை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் கணேஷ் செளத்ரி பகிர்ந்த குறிப்புகளைக் காணலாம்.

பொடுகு பிரச்சினை ஏற்படுவதன் காரணம் ?

உச்சந்தலையிலிருந்து இறந்த சரும செல்கள் வேகமாக வெளியேறுவதே பொடுகு பிரச்சினைக்கான காரணமாகும். இதனால் அரிப்பு உண்டாவதோடு, முடி மற்றும் தோல்களில் வெள்ளை அல்லது மஞ்சள் நிற செதில்கள் ஆங்காங்கே காணப்படும். இப்பிரச்சினை நபருக்கு நபர் வேறுபடும் ஆனால் வறண்ட சருமம், சருமத்தில் பிசுபிசு தன்மை, பூஞ்சை தொற்றுகள் மற்றும் தலையில் பயன்படுத்தும் வேதிப் பொருட்கள் ஆகியவையே பொடுகு பிரச்சினைக்குப் பிரதான காரணிகள்.

கற்றாழையின் முக்கியத்துவம் : பொதுவாகவே கற்றாழை, அதன் ஆரோக்கியம் மற்றும் தோல் பராமரிப்பு நன்மைகளுக்குப் பெயர் பெற்ற தாவரமாகும். நூற்றாண்டுகளாகக் கற்றாழை தாவரம், அதன் குணப்படுத்தும் பண்புகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

கற்றாழை பயன்பாடு தரும் பலன்கள்

உச்சந்தலையை ஈரப்பதமாக்குதல் :

குளிர்காலத்தில் இயல்பாகவே ஈரப்பதம் குறைந்து விடும் என்பதால் உச்சந்தலையில் வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படும். இங்குக் கற்றாழையை பயன்படுத்துவதால், அதன் இயற்கையான ஈரப்பதமூட்டும் பண்புகள் உச்சந்தலையில் வறட்சியை போக்க உதவுகின்றன. அரிப்பு பிரச்சினைக்கும் நிவாரணம் அளிக்கும்.

mid img

பூஞ்சை தொற்றுகளிடமிருந்து பாதுகாப்பு :

கற்றாழை தாவரத்தில் பூஞ்சை தொற்றுகளிடமிருந்து பாதுகாப்பு தரக்கூடிய பண்புகள் இருக்கின்றன. இந்தப் பண்புகள் பொடுகு உண்டாவதற்கான அடிப்படை காரணங்களை எதிர்த்துப் போராடும்.

மேலும் படிங்கMultani Mitti Uses : முகத்தில் முல்தானி மெட்டியை பயன்படுத்தும் வழிகள்!

தலையில் ஏற்படும் எரிச்சல் :

உச்சந்தலையில் பொடுகு பிரச்சினையால் ஏற்படும் அசெளகரியத்திலிருந்து கற்றாழை தாவரத்தின் குளிர்ச்சியான பண்புகள் உடனடி நிவாரணத்தை அளிக்கும். மேலும் அரிப்பு, தோல் சிவத்தல் ஆகியவற்றை குறைக்கும்

பொடுகு பிரச்சினைக்குக் கற்றாழையின் தீர்வு :

  • பொடுகு பிரச்சினையைத் தீர்க்கக் கற்றாழையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி மருத்துவர் கணேஷ் செளத்ரி கூறும் ஆலோசனைகள் கற்றாழை தாவரத்தினுள் இருக்கும் கூழை பிரித்தெடுக்க வேண்டும்.
  • அந்தக் கூழை உச்சந்தலையில் தொடங்கி தலை முழுவதும் மெதுவாகத் தேய்த்து மஸாஜ் செய்யவும், அதன் பிறகு 30 நிமிடங்களுக்குத் தலையை அப்படியே விடவும்.
  • 30 நிமிடங்கள் கழித்து தலையிலிருந்து கற்றாழை கூழை அகற்ற ஷாம்பூ பயன்படுத்தி தலையை நன்கு கழுவவும்.
  • சிறந்த பலன்கள் கிடைக்க வாரத்திற்கு இருமுறையாவது உச்சந்தலையில் கற்றாழை கூழை பயன்படுத்துங்கள். குளிர்காலத்தில் பொடுகு பிரச்சினை தவிர்க்க முடியாத ஒன்று என்றாலும், அதற்குக் கற்றாழை தாவரம் இயற்கையான மற்றும் உரிய தீர்வை வழங்குகிறது.
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP