ஆடி மாசம் கணவன் மனைவியை பிரிப்பது ஏன் தெரியுமா? ஆன்மிகம் என்ன சொல்கிறது?


G Kanimozhi
23-07-2025, 15:22 IST
gbsfwqac.top

    ஆடி மாதம் என்றாலே திருவிழா மாதம். இறைவனுக்காக ஒதுக்கப்பட்ட மாதங்களாக ஆடி மாதமும், மார்கழி மாதமும் பார்க்கப்படுகிறது.

திருமணம் கூடாது

    ஆடி மாதம் முழுவதும் இறைவனை நினைத்து தினமும் வணங்கி வழிபடுவதற்காக, அவரை தவிர வேறு எண்ணங்கள் வரக்கூடாது என்பதற்காக திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களை செய்யக்கூடாது.

தாம்பத்தியம் வைக்கக் கூடாது

    திருமண தம்பதிகள் இறைவனை முழுனமனதார வழிபடுவதற்காக தாம்பத்தியத்தில் ஈடுபடக்கூடாது. இன்றும் ஆடி மாதம் தொடங்கியதும் புதுமண பெண் அவளது பிறந்த வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவது வழக்கம்.

சித்திரையில் பிரசவம்

    ஆடி மாதத்தில் தம்பதிகள் சேர்ந்தால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும். சித்திரை மாதத்தில் வெயில் அதிகமாக இருப்பதால் பிரசவத்திற்கு ஏற்ற மாதமாக இருக்காது.

ஆடியில் விவசாயம்

    ஆடி மாதத்தில் மழையும் காற்றும் அற்புதமாக இருக்கும். விவசாயத்திற்காக அதிக பணம் செலவாகிவிடும் எனவே திருமணத்திற்கு பணத்தை செலவு செய்வது சிரமமாக இருக்கும்.

சித்திரையில் குழந்தை

    கத்திரி வெயில் காலமான சித்திரையில் தலைச்சான் குழந்தை பிறந்தால் சீரழியும் என்றும், அதோடு தகப்பனுக்கு ஆகாது என்று மூட நம்பிக்கை உள்ளது.

    இது போன்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தில் இணைந்திருங்கள்