தமிழகத்தில் அம்மனின் சக்தி பீடங்கள் எங்கு அமைந்துள்ளது என்பதை பற்றி பார்க்கலாம்
Abinaya Narayanan
19-07-2025, 22:46 IST
gbsfwqac.top
காஞ்சி காமாட்சி
அன்னையின் தொப்புள் பகுதி விழுந்த இடமே காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில். காமகோடி பீடம் என போற்றப்படும் சிறப்பு மிக்க பீடமாக இந்த கோவில் இருக்கிறது.
Image Credit : freepik
மதுரை மீனாட்சி
51 சக்தி பீடமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இருக்கிறது. இந்த கோவில் மந்திரிணி பீடம் என போற்றப்படுகிறது. இங்கு கல்வி மற்றும் கலைகளின் அதிபதியான அன்னை மீனாட்சி காட்சி அளிக்கிறார்.
Image Credit : freepik
ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி
ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமிக்கு அருகில் பர்வதவர்த்தினி அம்மன் தனி சன்னதியில் அமைந்துள்ளார். அம்மன் சன்னதி சேதுசக்தி பீடமாக போற்றப்படுகிறது.
Image Credit : freepik
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி
திருச்சி அருகில் உள்ள திருவானைக்காவலில் அருள்புரியும் அகிலாண்டேஸ்வரி ஸ்ரீசக்கரத்தை காதணியாக அணிந்திருக்கிறாள். இவை சக்தி பீடங்களில் ஞான பீடமாக போற்றப்படுகிறது.
Image Credit : freepik
திருவண்ணாமலை அபீதகுஜாம்பாள்
திருவண்ணாமலையில் அமைந்துள்ள அபிதகுஜாம்பாள் சிவனின் இடப்பாகத்தில் இடம்பெற்றுள்ளார், இவை சக்தி பீடத்தில் 8 ஆவது பீடமாக அமைந்துள்ளது. இது அருணை பீடம் என போற்றப்படுகிறது.
Image Credit : freepik
திருவாரூர் கமலாம்பாள்
9வது பீடமான திருவாரூர் கமலாம்பிகை அன்னை சந்திரனை தலையில் சூடி காட்சி தருகிறாள். இது கமலை பீடம் என்றும் அழைக்கப்படுகிறது.