Navratri Colours 2025 in Tamil: புனித நவராத்திரி பண்டிகை இன்று (செப்டம்பர் 22) முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களும், துர்கா தேவியின் ஒன்பது தெய்வீக வடிவங்களை பக்தர்கள் போற்றி வழிபடுகிறார்கள். ஒவ்வொரு நாளும், ஒரு குறிப்பிட்ட நிறம் சிறப்பு அர்த்தத்தை கொண்டுள்ளது. அந்த ஒன்பது வண்ணங்களையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் இப்போது காண்போம்.
மேலும் படிக்க: Navratri Wishes in Tamil: நவராத்திரி பண்டிகைக்கான சிறந்த வாழ்த்துச் செய்திகள்
இந்த நிறம் தூய்மையை குறிக்கிறது. இது அன்னை மகா ஷைலபுத்திரியோடு தொடர்புடையது. நீங்கள் அமைதியையும், பாதுகாப்பையும் அடைய விரும்பினால் அழகான வெள்ளை குர்தாவை அணியலாம்.
சிவப்பு நிறம் அன்பு, உணர்ச்சி மற்றும் பக்தி ஆகியவற்றை குறிக்கிறது. இது அன்னை பிரம்மசாரிணியோடு தொடர்புடையது. அம்மனுக்கு வழங்கப்படும் சுனரி எனப்படும் ஆடை பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் தான் இருக்கும். இது மிகவும் மங்களகரமான நிறமாக கருதப்படுகிறது.
ராயல் ப்ளூ நிறம் அமைதியையும், ஆழத்தையும், செழிப்பையும் குறிக்கிறது. இது அன்னை சந்திரகாந்தாவை வழிபடுவதற்கு ஏற்ற நிறமாகும். சந்திரகாந்தா தேவி, பார்வதி தேவியின் திருமண கோலத்தைக் குறிக்கிறார்.
மேலும் படிக்க: Navratri Decoration 2025: நவராத்திரியை கொலு வைத்து கொண்டாடுவது எப்படி? முழு விவரம் இதோ
மகிழ்ச்சியைத் தரும் இந்த பிரகாசமான மஞ்சள் நிறம், நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தி, மனதுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. இந்த நாளில், சாந்தத்தையும், அழகையும் குறிக்கும் அன்னை கூஷ்மாந்தாவை நாம் வழிபடுகிறோம்.
பசுமை நிறம் இயற்கையையும், புதிய தொடக்கங்களையும் குறிக்கிறது. இது செழிப்பு, அமைதி மற்றும் வளர்ச்சியையும் உணர்த்துகிறது. இந்த நிறத்தை அணிவதன் மூலம், அன்னை ஸ்கந்த மாதாவின் ஆசீர்வாதத்தை நீங்கள் பெறலாம்.
சாம்பல் நிறம் சமநிலையையும், ஒருவரை பணிவாக வைத்திருப்பதையும் குறிக்கிறது. இந்த நாளில், பார்வதி தேவியின் உக்கிரமான வடிவமான அன்னை காத்யாயினியை நாம் வழிபடுகிறோம்.
சூரியன் போல் பிரகாசமான ஆரஞ்சு நிறம், மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் குறிக்கிறது. இந்த நிறம் நேர்மறை ஆற்றலால் நிரம்பியுள்ளது. இந்த நாளில், அன்னை காளராத்திரியை நாம் வழிபடுகிறோம்.
மயில் பச்சை நிறம் தனித்தன்மை, புத்துணர்ச்சி மற்றும் கருணையை குறிக்கிறது. அழகிய பச்சை மற்றும் நீல நிறம் கலந்த இந்த வண்ணத்தை அணிந்து தனித்துவமாக திகழலாம்.
பிங்க் நிறம் பாசம், நல்லிணக்கம் மற்றும் உலகளாவிய அன்பைக் குறிக்கிறது. இந்த நிறம் ஈர்ப்பாக இருப்பதோடு, கருணை மற்றும் பிணைப்பை அதிகரிக்கிறது.
அதனடிப்படையில், ஒவ்வொரு நாளும் இத்தகைய வண்ணங்களில் ஆடை அணிந்து இந்த நவராத்திரியை நாம் சிறப்பாக கொண்டாடுவோம். இதன் மூலம் நலமும், வளமும் பெருகும் என்று நம்பப்படுகிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]