தக்காளியின் காம்பு பகுதியை சாப்பிட்டால் விஷமா? அறிவியல் என்ன கூறுகிறது


S MuthuKrishnan
13-06-2025, 11:11 IST
gbsfwqac.top

    தக்காளியில் அதிலும் குறிப்பாக தக்காளியின் தண்டு பகுதியில் சொலனின் என்ற கெமிக்கல் உள்ளது அதோடு நாம் தக்காளியை சாப்பிட்டால் நம் உடலில் டாக்சின் உண்டாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று ஒரு கருத்தை நிலவுகிறது இது உண்மையா என்று பார்க்கலாம்.

    சொலனின் என்பது தக்காளியிலும் உருளைக்கிழங்கிலும் அதிகமாக காணப்படும் மற்றும் இயற்கையாக உள்ள அல்கலாய்டு இதை நாம் அதிகமாக உட்கொள்ளும் போது ஆபத்து.

    அதிலும் குறிப்பாக 100மி.கி மேல் ஒரு மனிதர் எடுத்துக் கொண்டால் அவருக்கு வயிறு சார்ந்த உபாதைகள் தோன்றும். அதைவிட அதிகமாக 300 அல்லது 400 மி.கி எடுத்துக் கொள்ளும் போது நரம்பு ரீதியான பிரச்சனைகள் அல்லது இறப்பு நேர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

    ஆனால் உண்மை என்னவென்றால் பச்சையான பழுக்காத தக்காளியில்தான் இந்த சொலனின் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் பழுத்த தக்காளியில் 100 கிராம் தக்காளியை எடுத்துக் கொண்டால் அதில் 0.5 மி.கி சொலனின் மட்டுமே காணப்படுகிறது.

    எனவே இதனால் உடலில் டாக்ஸின் ஏற்படும் என்றால் ஒரு நபர் கிட்டத்தட்ட 20 கிலோ தக்காளியை உட்கொண்டால் மட்டுமே உடலில் டாக்ஸின் தோன்றும். அது நமது உடலுக்கு விஷத்தன்மையை கொடுக்கும்.

    எனவே நாம் சாப்பிடும் தக்காளியில் தண்டுப் பகுதியை நீக்காவிட்டால் உடலில் விஷத்தன்மை அதிகரிக்கும் என்பதும் நமது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதும் முழுக்க உண்மையல்ல. பழுத்த தக்காளியை எடுத்துக் கொள்வதால் எந்த பாதிப்பும் வர வாய்ப்பில்லை.