ஜூலை மாதத்தில் வெளியாகும் தமிழ் படங்கள்


Raja Balaji
23-06-2025, 13:11 IST
gbsfwqac.top

3BHK

    ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த் நடிக்கும் 3BHK திரைப்படம் ஜூலை 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

பறந்து போ

    அதே நாளில் ராம் இயக்கத்தில் பறந்து போ திரைப்படம் வெளியாகிறது. மிர்ச்சி சிவா, அஞ்சலி இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஜூராஸிக் ரீபெர்த்

    Jurassic World Rebirth திரைப்படம் ஜூலை 4ஆம் தேதி வெளியாகிறது. தலைவி ஸ்கார்லெட் ஜோஹான்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தேசிங்கு ராஜா 2

    எழில் இயக்கத்தில் விமல், ரவி மரியா, சிங்கம் புலி, புகழ் மற்றும் பலர் நடித்துள்ள தேசிங்கு ராஜா 2 திரைப்படம் ஜூலை 11ஆம் தேதி வெளியாகிறது.

ஃப்ரீடம்

    அதே நாளில் சசிகுமாரின் ஃப்ரீடம் படமும் வெளியாகிறது.

மாரீசன்

    மாமன்னன் படத்தை தொடர்ந்து வடிவேலு, பஹத் பாசில் நடிக்கும் மாரீசன் திரைப்படம் ஜூலை மாதத்தில் வெளியாகவுள்ளது. பவன் கல்யாணின் ஹரிஹர வீரமல்லு திரைப்படம் ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது.