சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் ஆக்ஷன் கலந்த காதல் படமாக உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியாகிறது.
டூரிஸ்ட் ஃபேமிலி
சசிகுமார், சிம்ரன் எம்.எஸ் பாஸ்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிழற்குடை
தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'நிழற்குடை' திரைப்படம் வருகிற மே 9ஆம் தேதி வெளியாக உள்ளது.
மாமன்
தொடர்ந்து கதாநாயகனாக கலக்கி வரும் நடிகர் அடுத்ததாக நடித்திருக்கும் 'மாமன்' திரைப்படம் மே 16ஆம் தேதி வெளியாகவுள்ளது. விலங்கு வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
டிடி நெக்ஸ்ட் லெவல்
சந்தானம் நடிப்பில் 'தில்லுக்கு துட்டு' மற்றும் அதன் இரண்டாம் பாகமான 'டிடி ரிட்டர்ன்ஸ்' ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது 'தில்லுக்கு துட்டு' படத்தின் மூன்றாம் பாகமான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் மே 16ஆம் தேதி வெளியாக உள்ளது.
ஏஸ்
பல மாதங்களாக ரிலீஸாகாமல் கிடப்பில் இருந்த விஜய் சேதுபதியின் 'ஏஸ்' திரைப்படம் மே 23ஆம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படை தலைவன்
சண்முக பாண்டியன் நடித்துள்ள ‘படை தலைவன்’ திரைப்படம் மே 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.