ஹோலி பண்டிகையின் தனித்துவமான கொண்டாட்டங்கள்


Alagar Raj AP
11-03-2025, 19:56 IST
gbsfwqac.top

ஹோலி பண்டிகை

    வண்ணங்களின் பண்டிகை என்று அழைக்கப்படும் ஹோலி பண்டிகை ஒற்றுமை, மகிழ்ச்சி மற்றும் பாரம்பரியத்தின் கொண்டாட்டம் ஆகும். இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டாலும் ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்துவமான முறையில் கொண்டாட்டங்கள் இருக்கும்.

ராஜஸ்தான்

    ராஜஸ்தான் மாநிலத்தில் யானைகள், குதிரைகள் மற்றும் நாட்டுப்புற நிகழ்ச்சிகள் என பிரமாண்ட ஊர்வலத்துடன் ஹோலி பண்டிகை கொண்டாடப்படும்.

மேற்கு வங்கம்

    மேற்கு வங்கத்தில் கிருஷ்ணன் மற்றும் ராதையின் சிலைகளை ஊஞ்சல்களில் ஊஞ்சலாட்டி ஹோலி கொண்டாடப்படுகிறது. கூடுதலாக, நடனம் மற்றும் பாடல்களால் நிறைந்திருக்கும்.

குஜராத்

    குஜராத்தில் குஜியா மற்றும் தண்டை போன்ற பாரம்பரிய குஜராத்தி இனிப்பு வகைகள், இசை மற்றும் நடனத்துடன் ஹோலி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

உத்தரப் பிரதேசம்

    உத்தரப் பிரதேசத்தில் பெண்கள் ஆண்களை குச்சிகளால் விளையாட்டுத்தனமாக அடித்து ஹோலி பண்டிகை கொண்டாடப்படும்.

பஞ்சாப்

    பஞ்சாபில் ஹோலி பண்டிகையின் போது மக்கள் தங்கள் தற்காப்பு கலைகளை காட்டும் விதமாக ஊர்வலங்கள் நடத்தப்படும்.

பீகார்

    அணிவகுப்புகள், இசை, நாட்டுப்புற நடனங்கள், பாரம்பரிய உணவுகள் என கோவாவில் ஹோலி கொண்டாட்டம் சுற்றுலா பயணிகளுடன் களைகட்டும்.