ஏழைகளின் ஊட்டி என்று சொல்லப்படும் ஏற்காட்டில் கிளியூர் நீர்வீழ்ச்சி, படகு இல்லம், தாவரவியல் பூங்கா, சேர்வராயன் கோயில் என சுற்றிப் பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன.
மேட்டூர் அணை
காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையின் உயரம் 214 அடி ஆகும். அணைப்பகுதியில் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இது சேலத்தின் பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.
சங்ககிரி கோட்டை
15ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசரால் இந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது. வரி வசூல் கிடங்காக ஆங்கிலேயர்கள் கோட்டையை பயன்படுத்தியுள்ளனர். தீரன் சின்னமலையை தூக்கிலிட்டதும் இங்கே தான்.
கைலாசநாதர் கோயில்
தாரமங்கலத்தில் உள்ள இந்த கோயில் சிற்பக் கலைக்கு மிகவும் பெயர் பெற்றது. அங்குள்ள சிங்கத்தின் வாயில் உருளும் கல்லை உருட்ட முடியும். ஆனால் வெளியே எடுக்க முடியாது.
1008 லிங்கம் கோயில்
சேலத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோயிலில் ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து வெளியே வரும் வரை மொத்தம் 1,008 லிங்கங்கள் இருக்கும்.
முத்துமலை முருகன் கோயில்
சில ஆண்டுகளுக்கு முன்பு முருகரின் பக்தர்கள் ஒன்று சேர்ந்து உலகிலேயே மிகப்பெரிய முருகர் சிலையை அமைத்துள்ளனர். இதன் உயரம் 146 அடி ஆகும்.
குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா
ஏற்காடு மலையடிவாரத்தில் இந்த பூங்காவில் குரங்குகள், மான்கள், வெள்ளை மயில், முதலைகள், வெளிநாட்டு பறவைகளை பார்க்க முடியும்.